LOGIN
dinamalar telegram
Advertisement

கொரோனா தொற்று பரவல் அக்டோபரில் அதிகரிக்கும்

Share
சென்னை : ''கொரோனா தொற்று பரவல், அக்டோபரில் இன்னும் அதிகரிக்கும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை, கொளத்துார் தொகுதியில், நலத்திட்ட உதவிகளை, வழங்கி ஸ்டாலின் பேசியதாவது:
கொரோனா தொற்று பரவல் இன்னும் முடிவடையவில்லை. அக்டோபரில் இன்னும் அதிகரிக்கும் என, சொல்கின்றனர்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நாம் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்; மக்களுக்கு பணியாற்றி, நாட்டை காப்பாற்ற முடியும். எதிர்கால சந்ததியினருக்கு நாம் வழிகாட்ட முடியும். ஆகவே, கட்சியினர் அனைவரும் பத்திரமாக, ஜாக்கிரதையாக, கவனமாக, சுகாதாரமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement