LOGIN
dinamalar telegram
Advertisement

ரூ.62 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

Share
Tamil News
சென்னை : குவைத், யு.ஏ.இ., நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட, 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தங்கம், ஐ - போன்கள் மற்றும் கேமரா 'ட்ரோன்களை' சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு நாடான யு.ஏ.இ.,யிலிருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று காலை, 8:25 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, சென்னையைச் சேர்ந்த ஒரு நபரை, சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத்துறையினர் சோதனைஇட்டனர்.அதில், அவரது உடைமைகள் மற்றும் உள்ளாடைகளுக்குள் இருந்து, 510 கிராம் தங்கம், ஐந்து கேமரா ட்ரோன்கள், இரண்டு ஐ - போன்கள், 32 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில், குவைத்திலிருந்து, 'குவைத் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் மாலை, 5:45 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, ஆந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த, மூன்று நபர்களை சோதனையிட்ட போது, அவர்களின் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 586 கிராம் தங்க நகைகள், 30.60 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரையும், சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement