LOGIN
dinamalar telegram
Advertisement

இலவச சேர்க்கை பதிவு : நாளை முடிவு

Share
சென்னை : தனியார் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' பதிவு நாளை முடிகிறது.
கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.அவர்களுக்கு அரசின் சார்பில் கல்வி கட்டணம் வழங்கப்படும். எட்டாம் வகுப்பு வரை, இந்தச் சலுகையுடன் தனியார் பள்ளிகளில் படிக்கலாம். தமிழக அரசின் சார்பில், ஆன்லைன் வழியில் இந்த மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் நுழைவு நிலையில் உள்ள, எல்.கே.ஜி., மழலையர் வகுப்பு அல்லது ஒன்றாம் வகுப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.இந்தத் திட்டத்தில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான, 'ஆன்லைன்' பதிவு ஆக., 27ல் துவங்கியது; நாளை பதிவு முடிகிறது. இதுவரை விண்ணப்பிக்காத பெற்றோர், விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement