LOGIN
dinamalar telegram
Advertisement

தீவிரம்: திருக்கோவிலூரில் போக்குவரத்து சீரமைப்பு பணி...மேலும் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை தேவை

Share
Tamil News
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் டி.எஸ்.பி.,யின் அதிரடி நடவடிக்கை காரணமாக நகரில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது போல் அரசியல் கட்சிகள் உள்ளிட்டவைகள் பொதுக்கூட்டங்களை நடத்த மார்க்கெட் வீதியில் உள்ள பொதுக்கூட்ட மேடையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கோவிலுார் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது தினசரி வழக்கமான ஒன்றாகி விட்டது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காரணமாக காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனால், நகரில் சாலையின் இரு பக்கங்களிலும் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தன. இதனால் பாதசாரிகள் நடந்து செல்லவே சிரமம் என்ற நிலை இருந்தது.புதிதாக பொறுப்பேற்ற டி.எஸ்.பி., ராஜி முதல் நடவடிக்கையாக நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார்.வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அழைத்து போக்குவரத்து நெறிமுறை குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, வடக்கு வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. சாலையோரம் இருசக்கர வாகனங்கள், தள்ளு வண்டிகள், சாலையோர வியாபாரிகள் குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் வகையில் சாலையில் கயிறு பதித்து எல்லை வரையறை செய்யப்பட்டது.இதன் காரணமாக வடக்கு வீதி, கிழக்கு வீதி, சன்னதி வீதி உள்ளிட்ட தெருக்களில் தற்போது போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்களை ஒழுங்காக நிறுத்தியும், எல்லை மீறாமல் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்வதையும் காணமுடிகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதேப்போன்று ஐந்து முனை சந்திப்பு, பஸ் நிலையம் எதிரில் நான்கு முனை சந்திப்பு என நகரின் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் அவ்வப்போது நடைபெறும் போராட்டங்கள், பொதுக் கூட்டங்களால் நகர மக்கள் இன்னலுக்கு ஆளாவது வழக்கமாக உள்ளது.

மார்க்கெட் வீதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்து வந்த பொதுக்கூட்ட மேடை, சமீபத்தில் பேரூராட்சி நிர்வாகத்தால் சீரமைக்கப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.சட்டசபை தேர்தல் நெருங்க உள்ள நிலையில், பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டங்களை மார்க்கெட் வீதியில் நடத்துவதற்கு டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement