LOGIN
dinamalar telegram
Advertisement

கடலுாரில் 318 பேர் டிஸ்சார்ஜ் 183 பேருக்கு தொற்று; 4 பேர் பலி

Share
Tamil News
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், நேற்று 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 704 ஆக உயர்ந்தது.

கடலுார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 18 ஆயிரத்து 521 பேர். நேற்று 183 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 704 ஆக உயர்ந்துள்ளது.நேற்று 318 பேர் குணமடைந்ததால், இது வரை 16 ஆயிரத்து 439 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொற்று பாதித்த1,845 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 68 பேருக்கு பரிசோதனை செய்ததில், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 93 பேருக்கு தொற்று இல்லை. 3,271 பேருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் 96 பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.4 பேர் பலிமாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 200 பேர் இறந்துள்ள நிலையில், நேற்று 4 பேர் இறந்தனர். சிதம்பரத்தை சேர்ந்த 58 வயது நபர், 81 வயது நபர், கடலுாரைச் சேர்ந்த 62 வயது நபர், நெய்வேலியைச் சேர்ந்த 53 வயது நபர் ஆகியோர் நேற்று இறந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement