LOGIN
dinamalar telegram
Advertisement

வெங்காய ஏற்றுமதி தடைக்கு எதிராக மஹாராஷ்டிர அரசு கடிதம்

Share
மும்பை : இந்தியாவில் நியாயமற்ற' வெங்காய ஏற்றுமதி தடைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கும் சமீபத்தில் மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையால் அதிகமாக வெங்காய சாகுபடி / விளைவிக்கும் மஹாராஷ்டிர உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் வெங்காய உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்ட “அநீதியை” மாநில அரசு எடுத்துக்காட்டுகிறது. அத்துடன் தடையை ரத்து செய்ய முற்படுகிறது. எனவே மத்திய அரசின் முடிவுக்கு மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதற்காக மாநில அரசு மத்திய அரசிடம் இது தொடர்பாக மீண்டும் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை அறுவடை காலத்தின் முடிவில், மகாராஷ்டிராவில் வெங்காய விவசாயிகள் சுமார் 27 லட்சம் டன் சேமித்து வைத்திருந்தனர், அதில் 60 சதவீத பங்கு உள்ளது. கடந்த ஆண்டு 7 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடும்போது, ​​சாகுபடி பரப்பு 9 லட்சம் ஹெக்டேருக்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து மாநில அரசு அதிகாரி கூறுகையில், வெங்காய உற்பத்தியாளர்களைத் தடை செய்துள்ளதால், அதற்கு எதிராக கடுமையான மற்றும் அவசர நடவடிக்கைகள் தேவை. வெங்காயத்தின் விலை பல மாதங்களாக / ஆக., மாதத்தில் விலை குறைவாக இருந்தது. தற்போது உயர தொடங்கிய நேரத்தில், அரசின் ஏற்றுமதி தடை உத்தரவு வந்துள்ளது. இது விவசாயிகளுக்கு எதிரானது.

இந்த ஆண்டு செப்., மாதத்தில், மண்டிஸில் வெங்காயத்தின் சராசரி விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,750 ஆக இருந்தது, இது கடந்த ஆண்டு சராசரியாக 2,813 ரூபாயை விட மிகக் குறைவு. இந்திய வெங்காயத்திற்கான தேவை எல்லா நேரத்திலும் அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்த தடை வந்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே 2020 க்கு இடையில், கிட்டத்தட்ட 4.4 லட்சம் டன் வெங்காயம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. "தற்போதைய தடை எந்தவொரு கணக்கிலும் நியாயமானதல்ல, வெங்காய விவசாயிகளுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது". முன்னாள் மாநில அமைச்சருமான சதாபாவ் கோட் கூட ஏற்றுமதி தடைக்கு எதிராக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • R S BALA - Tiruvallur,இந்தியா

    ஒரு நேரம் எகிப்து ல இருந்து வெங்காயம் இறக்குமதி ஆகுது ,இப்போ இந்தியாவுலேர்ந்து ஏற்றுமதி பண்ணனும் ,என்னதான் நடக்குது வெங்காய விஷயத்துல ,ஒன்னும் புரியல .

  • natarajan s - chennai,இந்தியா

    நமது நாட்டில் அரசியல் வெங்காயத்தை சுற்றித்தான் நடக்கும். வியாபாரிகளுக்கு எதுர்மதி மூலம் பணம், பின்னர் செயற்கை தட்டுபாடு ஏற்படுத்தி விலை ஏற்றி அதிலும் பணம். நாக்பூர் மொத்த சந்தை NCP காரகளிடம்தான் உள்ளது. அதுதான் இவளவு கூப்பாடு.

  • Madhavan Balan - Riyadh,சவுதி அரேபியா

    அரசியல் செய்வதையே முழுநேர பிழைப்பாக கொண்டுள்ள எதிரி கட்சிகள்

  • vbs manian - hyderabad,இந்தியா

    குளிர் காலத்தில் வெங்காயம் சீக்கிரம் கேட்டு போகும். தேவை அதிகரிக்கும். விலை விண்ணை தொடும். அப்போதும் மோடியை திட்டுவார்கள். சரத் பவார் பின்னணி.

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    தடை செய்யவில்லை என்றால் அதனால தான் வெங்காயம் விலை ஏறி விட்டது என்று இதே அரசியல் வாதிகள் கூப்பாடு போடுவார்கள். இப்போதே தடை செய்யாமல் விலை ஏறிய பிறகு தடை செய்ய வேண்டுமா

Advertisement