LOGIN
dinamalar telegram
Advertisement

இந்தியாவில் சைபர் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரிப்பு: அஜீத் தோவல்

Share
புதுடில்லி: இந்தியாவில் சைபர் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

டில்லியில் ஆன்லைனில் நடந்த சைபர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கொரோனா பேரிடரால் ரொக்கப்பணம் கையாள்வது குறைந்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். டிஜிட்டல் பண வர்த்தகம் மூலம் தனிமனித தகவல்கள் திருடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த சூழலை பயன்படுத்தி சமூக விரோதிகள் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள் பரவாமல் தடுக்க தேசிய இணைய பாதுகாப்பு உத்தி 2020 ஐ அரசு துவங்கி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நம்பகமான, பாதுகாப்பான இணைய வசதி உறுதி செய்யப்பட உள்ளது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    டிஜிட்டல் இந்தியா சார்....

Advertisement