சாலையோர சுவர்களில் ஓவியங்கள் வரையும் ஐ.டி., பொறியாளர்கள்
குன்னுார் : குன்னுாரில் ஐ.டி., இளைஞர்கள், டாக்டர், இன்ஜினியர் உட்பட தன்னார்வ குழுவினர், பறவைகள் மற்றும் வனவிலங்கு ஓவியங்களை, மதில்சுவர்களில் வரைந்து வருவது வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள், சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய ஐ.டி., இளைஞர்கள், டாக்டர், பொறியாளர், ஆசிரியர் என பணியாற்றுகின்றனர். லாக்டவுனில் இங்கேயே முடங்கியதால், நேரத்தை வீணாக்காமல் 'கிளீன் குன்னுார் 'அமைப்பினருடன் இணைந்து, வனப்பகுதியில் குப்பைகளை அகற்றுகின்றனர். சாலையோர மதில் சுவர்களில் வன விலங்குகள், பறவைகளை வண்ணஓவியங்களாக வரைகின்றனர்.இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து யோகா ஆசிரியை திவ்யா மேனன் கூறுகையில் "கொரோனா லாக்டவுன் காரணமாக இங்கு வந்த ஐ.டி., இளைஞர்கள் டாக்டர்கள், பொறியாளர்கள் அடங்கியகுழுவினர் குன்னூரை துாய்மையாக மாற்றுவது என்பன போன்ற பணிகள்தொடர்ந்து செய்து வருகிறோம். இதில் 'கைகோர்ப்போம்; குன்னுாரை தூய்மையாக பாதுகாப்போம்' என்பதைவலியுறுத்தி, ஓவியங்கள் வரைந்து வருகிறோம். குப்பையில்லா நகரமாக மாற்ற பலரும் ஆதரவு நல்கினால்மேலும் மேம்படுத்தலாம்" என்றார்.

வாசகர் கருத்து (2)
நம்ம சின்ன சுடலைக்கு பிடித்த ஓவியம்
என்ன அவன் அவன் 100 கோடி செலவு செய்து சுவர் எல்லாம் எழுப்புகிறான் அப்புறம் என்ன