LOGIN
dinamalar telegram
Advertisement

சே... இப்படி ஏமாந்து விட்டோமே! வெங்காய விவசாயிகள் கண்ணீர்

Share
Tamil News
பேரூர்:பட்டறைகளில் இருப்பு வைத்திருந்த சின்ன வெங்காயம் அழுகி வருவதால், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்துார் ஒன்றியம் சின்ன வெங்காயம் சாகுபடியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த வைகாசி பட்டத்தில், ஆயிரம் எக்டரில் நடவு செய்யப்பட்டது.கடந்த மாதம் அறுவடை துவங்கிய போது, கிலோ, ரூ.23க்கு மட்டுமே கொள்முதலானது. அதனால், பட்டறைகளில் இருப்பு வைக்கப்பட்டது. கடந்த வாரத்தில், முதல் தரம் கிலோ, ரூ. 50 வரை கொள்முதலாகி வந்தது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியானது.இந்நிலையில், மத்திய அரசு அனைத்துவித வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதித்தது.
இதையடுத்து, வியாபாரிகள் வருகை குறைந்து, விற்பனை சரிந்துள்ளது.தற்போது, மழை மற்றும் குளிர்ந்த சீதோஷ்ணத்தால், அழுகத் துவங்கியுள்ளது. பட்டறைகளை பிரித்து, அழுகல் வெங்காயங்களை அகற்றும் பணி நடக்கிறது. செலவு அதிகரிப்பதுடன், டன் கணக்கில் சேதமாகியுள்ளது. அதனால், ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், 'இன்னும் ஒரு மாதம் மட்டுமே, வெங்காயம் தாக்குப் பிடிக்கும். அதன் பின் மொத்தமும் வீணாகி விடும். விவசாயிகளுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசு, ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும். சின்ன வெங்காயம் நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • தமிழ் -

    வெங்காயத்தில் லாபம் பார்க்கும்போதுமட்டும் நல்லா இருந்துச்சா.

  • ஆரூர் ரங் -

    மற்ற மாநிலங்களில் அதிக மழையால் இன்னொரு போக வெங்காயப் பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது பல மாநிலங்களில் சில்லறை விலை ரூ 80-100. ஆண்டு இறுதிவரை வெங்காயத் தட்டுபாடு நீடிக்கும். நேரடியாக நாட்டில் எங்கேயும் விற்கும் சட்டம்தான் நீண்டகால அளவில் இப்பிரச்னைக்குத் தீர்வுப்

  • ஆப்பு -

    ஏன் அழுவுறீங்க? பிரதமரின் புதிய விவசாய மசோதாப்படி, வெங்காய விலையை நீங்களே நிர்ணயித்து அதிக விலைக்கு விக்கலாம். வருமானம் ரெட்டிப்பாயிடும். இப்பவே வெங்காய விலையை கிலோ 300 ரூவான்னு சொல்லிடுங்க. அரசே அந்த விலை குடுத்து வாங்கிரும்.

Advertisement