LOGIN
dinamalar telegram
Advertisement

ரவுடியைத் தான்

Share
Tamil News
'ரவுடியைத் தான் அவங்களுக்கு பிடிக்கும்'


'நீட்' தேர்வு பயத்தில், மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, மாணவர்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சி முகாம், அடுத்த சில நாட்களில் நடந்தது.இதில், கலெக்டர் வினய் பேசுகையில், 'பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் அடிப்படையில், எனக்கு, மருத்துவக் கல்லுாரியில், 'சீட்' கிடைத்தது. மருத்துவம் படிக்க விருப்பமில்லாததால், 'சிவில் சர்வீஸ்' தேர்வு எழுதினேன்; வெற்றியும் பெற்றேன். தினந்தோறும், மாற்றம் ஏற்படுகிறது. அதற்கு ஏற்ப, மாணவர்கள் தயாராக வேண்டும்' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'கலெக்டரின், 'பிளாஷ்பேக்' நல்லாயிருக்கு பா... இதை, படமாகவே எடுக்கலாம்' என்றார்.அருகிலிருந்த இளம் நிருபர், 'சினிமாக்காரங்களுக்கு ரவுடி, திருடன் இவங்களைத் தான் பிடிக்கும்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    உலகிலுள்ள எல்லாருமே டாக்டர் ஆகத்தான் வேண்டுமா? பெற்றோர் என்னவோ தங்கள் வாரிசு உலகில் நோயே இல்லாது செய்துவிடப்போவதாகக் கனவு கண்டு குழந்தைகளை கோச்சிங் என்று கொடுக்கும் அதிகப்படி அழுத்தம்தான் இதற்கு முழுமுதல் காரணம் கலெக்டரின் அறிவுரை மிக நன்று

Advertisement