ADVERTISEMENT
வரக்கூடும் இன்னும் ஒரு பெருந்தொற்று. அப்படி வந்தால், அதை எப்படி தடுப்பது என்று பல துறையினர் சிந்திக்கத் துவங்கிவிட்டனர். அப்படி சிந்திப்போரில் நகர திட்டமிடல் வல்லுனர்களும் அடங்குவர்.
அண்மையில், ஸ்பெயினிலுள்ள குவாலார்ட் ஆர்க்கிடெக்ட்ஸ் என்ற கட்டடக்கலை அமைப்பு ஒரு சர்வதேச போட்டிக்கு ஒரு முன் மாதிரி நகரத்திற்கான குட்டி மாதிரிகளை வடிவமைத்து அனுப்பிஇருந்தது.இந்த நவீன நகரத்தின் சிறப்பே, அது பெருந்தொற்றுக் கால ஊரடங்கின்போது, மக்கள் பெரிய சிரமம் இன்றி முடிந்தவரை இயல்பு வாழ்க்கையை வாழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது தான்.
வீட்டு மாடி அல்லது, அடுக்ககங்களைச் சுற்றிலும் உள்ள காலி இடங்களில் உணவுத் தோட்டங்கள், மழை நீர் சேகரிப்பு, சூரிய ஒளிப் பலகைகள், சைக்கிள் பயணத்திற்கு தனி பாதை, வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு, 5ஜி தகவல்தொடர்பு வசதி கொண்ட அறை, குடும்பத்தினர் சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்க, வசதியாக இடம்.இப்படி பல கோணங்களில் சிந்தித்து அந்த நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வடிவமைப்பு, ஊடகங்களின் பாராட்டைப் பெற்றிருப்பதோடு, போட்டியை அறிவித்த சீனாவிலுள்ள ஹெபேய் மாகாணத்தின், ஜியாங் ஆன் நகர நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
|||| போட்டியை அறிவித்த சீனாவிலுள்ள ஹெபேய் மாகாணத்தின், ஜியாங் ஆன் நகர நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது //// நிபுணர்களைக் கொண்டு டிசைன் செய்தால் அதிக செலவு செய்யவேண்டும் என்பதால் ஒரு போட்டியாக அறிவித்திருக்கிறது சீனா வஞ்சகத்துடன் கூடிய புத்திசாலித்தனம்