LOGIN
dinamalar telegram
Advertisement

அதிகாரிகள் மாறவே மாட்டாங்க!

Share
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், பாதாள சாக்கடை திட்டப் பணி குறித்த ஆய்வு கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், துணை சபாநாயகர் ஜெயராமன் பேசுகையில், 'ஒவ்வொரு முறையும், 'ஓரிரு மாதத்தில், பாதாள சாக்கடை திட்டப் பணி முடியும்' என, சொல்லுறீங்க... கடந்தாண்டு முடிய வேண்டிய பணி, இன்னும் முடியவில்லை. எப்போது தான், பணிகளை முடிப்பீங்க... உங்க இஷ்டம் போல பண்ணுங்க...' என, வேதனையோடு பேசினார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர், 'துணை சபாநாயகர் இப்படி பேசுறாரே... ஒப்பந்ததாரரும், அதிகாரிகளும் அதை கண்டுக்கவே மாட்டேங்கிறாங்களே...' என்றார்.அங்கிருந்த நிருபர் ஒருவர், 'ஆட்சியாளர்கள் மாறுவாங்க... அதிகாரிகள் மாறவே மாட்டாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆம் என்று, லேசாக சிரித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அவருடைய ‘பங்கு’ வந்து சேராத கடுப்பில் பேசியிருப்பார்

Advertisement