Advertisement

மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 3,559 ஆக உயர்வு

Share
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், இரண்டு போலீசார் உள்பட நேற்று, ஒரே நாளில், 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும், 56 வயது ஆண், மாவட்ட பிளானிங் அலுவலர், ஆலாம்பாளையத்தை சேர்ந்த, 39 வயது அங்கன்வாடி ஆசிரியை ஆகியோருக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, ப.வேலூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால், பாதிக்கப்பட்டனர். அதேபோல், ஈரோடு, திருச்சி, சேலம், கரூர், கோவை மற்றும் கர்நாடகா மாநிலம் சென்று வந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, நேற்று, 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3,559 ஆக உயர்ந்தது. நேற்று, 110 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 2,628 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் 52 வயதான ஆண் எஸ்.ஐ., இறந்தார். அதையடுத்து, மாவட்டத்தில், இதுவரை, 52 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement