Advertisement

திருவள்ளுவர் பல்கலை இரண்டாக பிரிப்பு

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் 110 வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு: வேலூரில் செயல்படும் திருவள்ளுவர் பல்கலைகழகம் இரண்டாக பிரிக்கப்படும். புதிய பல்கலைகழகம், விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த ஆண்டு முதலே, புதிய பல்கலைகழகம் செயல்படும் எனக்கூறினார்.
இதற்கு திமுக எம்.எல்.ஏ., துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். கருணாநிதி கொண்டு வந்ததால், திருவள்ளுவர் பல்கலைகழகத்தை அரசு பிரிக்கிறதா? பல்கலை பிரிக்கப்பட்டால், அதே பெயர் இருக்குமா ? பல்கலைகழகத்தில் ஏற்கனவே பல அடிப்படை வசதிகள் இல்லை. ஒன்றும் இல்லாத பல்கலைகழகத்தை இரண்டாக பிரிப்பது சரியல்ல எனக்கூறினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் இ.பி.எஸ்., மாணவர் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் பல்கலை பிரிக்கப்படுகிறது. இதில், அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (18)

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    சசிகலா பல்கலை கலக்கம் எந்த வரையிலே கீது நாலுபாகமா துடுப்பாகமா களவிலேதான் விளையாடுறீங்க எல்லோரும்

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் கட்சித்தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு அமையவுள்ள பல்கலை கழகத்திற்கு புரட்சித்தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயர் அறிவிக்கலாம்.

  • venkatan - Puducherry,இந்தியா

    The state universities should be free from corruption and political clutches. Research standards as per the international bench marks.Appointments only on merit based.Research scholars are to be guided by the global reputed faculties.Every and each scholar should be compensated with fellowships sans e religion based.These are all some of good things.Otherwise bifurcation and also creations are useless,but political dogmatism and paving the way for further corruption and favouritism.

  • Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா

    இந்த பல்கலைக்கழம் வள்ளலார் அல்லது வள்ளல் ராமலிங்கனார் பல்கலை கழகம் என்று பெயர் வைக்கவேண்டும். இதற்கு அணைத்து மக்களும் சம்மதிப்பார்கள என்று கேட்டுக்கொள்கிறேன் .

  • natarajan s - chennai,இந்தியா

    பொதுவாகவே தமிழ் நாடு பல்கலைக்கழகங்கள் பிற நாடுகளில் பெயர் குழப்பம் காரணமாக recognise செய்யப்படுவதில்லை, அதிலும் இந்த தனியார் பல்கலைகழகங்கள் எதற்கும் வெளி மாநிலங்களிலும், வெளி நாட்டிலும் அறிமுகமாகமோ அங்கீகாரமோ கிடையாது. இதில் படித்து வருபவர்கள் வெளிநாடுகளில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். தமிழ் நாட்டின் சாப கேடு கற்றரிந்த (SCHOLAR ) ஒருத்தர் பெயரிலும் பல்கலைகழகம் இல்லை.

Advertisement