Advertisement

தி.மு.க., ‛தலைகள் நடத்தும் பள்ளிகள் முன் போராட்டம்!

Share
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை, தி.மு.க., கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால், ஸ்டாலின் மகள் செந்தாமரை நடத்தும், சி.பி.எஸ்.சி., பள்ளியில், மும்மொழி கொள்கையிலதான் பாடம் நடக்குதாம்...
‛மும்மொழி கொள்கையை ஏத்துக்கங்க... அல்லது இரு மொழி கொள்கைப்படி, சமச்சீர் கல்விக்கு பள்ளி பாடதிட்டத்தை மாத்திடுங்க'ன்னு, வலியுறுத்தி, ெஹச். ராஜா போராட்டம் நடத்த போறாராம்.. இதேமாதிரி, தி.மு.க., தலைவர்கள் நடத்துற எல்லா பள்ளிகள் முன்பும், பா.ஜ., சார்புல போராட்டம் நடத்தவும் ராஜா திட்டமிட்டிருக்காராம்.

துரைமுருகனுக்கு அமைச்சர் பாராட்டு!





‛எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகன், மாபெரும் திராவிட இயக்கத்தின் பொதுச் செயலராகி இருக்கிறது பெருமைக்குரியது'ன்னு அமைச்சர் வீரமணி வெளிப்படையா சொல்லியிருப்பது, அ.தி.மு.க., வட்டாரதுல சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு.
ஏற்கனவே, இவர்கள் இருவரும், ஒரே சமூகத்தை சேர்ந்தவங்களா இருக்கிறதால, இரண்டு பேருக்கும் நல்ல இணக்கம் இருக்கிறது எல்லாருக்கும் தெரியும். வேலூர் மாவட்டத்தில் வீரமணியை எதிர்த்து, தி.மு.க., சார்பில் யாரையும் போராட்டக் களத்துக்கு வராமல் துரைமுருகன் பார்த்து வந்ததையெல்லாம் முடிச்சுட்டு போட்டு, அ.தி.மு.க., வட்டாரத்துல பரபரப்பா பேசுகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (41)

  • mathimandhiri - chennai,இந்தியா

    தீய மு க காரன் பள்ளிகளில் இந்தி முக்கியமாக சொல்லித் தரப்படுதுன்னு எந்த கொத்தடிமைக் காவது தெரியுமா என்றால் நிச்சயம் தெரிந்திருக்கவே தெரிந்திருக்ககாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், கொடி கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, தலைவர் தலைமுறை படம் பல போசுகளில் வரைந்து அசத்துவது, குஷிப் படுத்துவது இலவசம், வோட்டுக்குப் பணம், குவாட்டர், பிரியாணி, அடுத்த தலைமுறையை அடிமைத் தொழிலுக்குத் தயார் செய்வது, இவை தான்.

  • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    vaa vaa machan kaathu irukiroom

  • Rajan - Gaborone,போஸ்ட்வானா

    அப்படியே பாடமே நடத்தாத மே மாதத்திற்கும் பள்ளிகள் முழு பீஸ் வாங்குவதையும் தடுத்தால் சிறப்பு.

  • Indian Ravichandran - Chennai,இந்தியா

    இருமொழிக்கொள்கை மட்டுந்தான் வேண்டுமென்றால் அணைத்து வித பள்ளிக்கும் பொருந்தும் என்ற சட்டத்தையும் அதை கட்டாயப்படுத்தும் சட்டத்தையும் சூடு சொரணை இருந்தால் இந்த அரசும் தமிழ் மொழி காப்பாளராகிலும் கொண்டு வரவேண்டும், செய்வீர்களா செய்வீர்கலா செய்வீர்களா. ஒருத்தனும் பேசமாட்டான் இதபடிச்சாலும் படிக்காத மாதிரி முகத்தை வச்சுக்குவான்.

  • Indian Ravichandran - Chennai,இந்தியா

    நிச்சயம் இந்த போராட்டத்தை தீவிர படுத்த வேண்டும் அரசியல்வாதிகள் பள்ளிகள் எத்தனை அத்தனை கணக்கும் வந்துவிடும், தமிழ்நாடு முழுக்க திமுகா அதிமுக பிரமுகர்கள் பள்ளிகளை முற்றுகை இட்டு உடனே இருமொழி பாடத்திட்டத்தை மட்டும் நடத்தும் படி பாஜக போராடவேண்டும், ராஜா வழிசொல்லிவிட்டார் தீவிரப்படுத்தவேண்டியது பாஜக தொண்டர்கள் கடமை.

Advertisement