Advertisement

முதுநிலை மருத்துவ கவுன்சிலிங்கை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Share
புதுடில்லி: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை நீட்டிக்க வேண்டும் எனக்கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஆக., 31 அன்றுடன் நிறைவு பெற்றது. இதனை மேலும் 15 நாள் நீட்டிக்க வேண்டும் எனக்கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கவுன்சிலிங்கை ஒரு நாள் நீட்டிக்க அனுமதிக்கக்கூடாது எனக்கூறியிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ஆரூர் ரங் -

    50 இடவொதுகீட்டை அமல்படுத்த கேஸ் போட்டு இந்த கவுன்சலிங்கை ஒத்திப்போட முயன்றார்கள். இப்போ கவுன்சலிங் காலம் தாழ்ந்து விட்டது.. இனிமேல் நடத்தக்கூடாது என கோர்ட் சொல்லிவிட்டதால் இந்தாண்டு அட்மிஷனே இருக்காது. பாதிக்கப்பட்டது மெரிட் மாணவர்கள். BC வாக்கு வங்கி அரசியலுக்கு அடிமையாகி டுமீல்நாடு சிதைகிறது.

  • RAMAMOORTHI S - COIMBATORE,இந்தியா

    தமிழ் நாடு அரசுக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கும்போது, இதில் கவனம் செலுத்தியது எதற்காக ? சாலைகள் செப்பனிடுவது போன்ற பணிகளை செய்தால் மக்கள்ஒட்டு போடுவார்கள்.

Advertisement