Advertisement

நகை திருட முயன்ற இருவர் சுட்டுக் கொலை

Share
பெர்லின்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் செலி நகரில், முதிய தம்பதியினர் நடத்தி வந்த நகைக் கடைக்குள் புகுந்த இருவர், நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். இதையடுத்து, கடை உரிமையாளரான முதியவர், துப்பாக்கியால் இருவரையும் சுட்டார். இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement