Advertisement

மக்களை கை கழுவியது ஏன்?: கமல் கேள்வி

Share
சென்னை : 'மக்களை கை கழுவச் சொன்ன அரசு இப்போது மக்களையே கை கழுவி விட்டது ஏன்' என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல் அறிக்கை: 'நீட்' நுழைவு தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை வழிக்கு கொண்டு வராமல் மாணவர்களுக்கு முறையான பயிற்சி தன்னம்பிக்கை தரத் தவறிய இந்த அரசால் இன்னும் எத்தனை மரணங்களை தமிழகம் தாங்கும்.நிவாரணம் வாயிலாக பிரச்னையை மூடி மறைக்க நினைக்கின்றனர்.

விவசாயிகளுக்கான உதவித் தொகையை உண்மையான பயனாளிகளுக்கு சேர்க்க தவறியதன் வாயிலாக தன் ஊழல் முகத்தை கொரோனா காலத்தில் கூட அரசு காட்டுவது முறையா. 'ஆன்லைன்' கல்வி முறையில் எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்தாமல் அலட்சியப் போக்கு காட்டியுள்ளது. மக்களை கை கழுவச் சொன்ன அரசு இப்போது மக்களையே கை கழுவி விட்டது.
கொரோனா நெருக்கடியில் பொருளாதார பாதிப்புக்கு இடையே எட்டு வழிச்சாலைக்கு இத்தனை அவசரம் காட்டுவது ஏன்; மீனவர்கள் நலனில் இந்த அரசு எப்போது கவனம் செலுத்தும்; வேலைவாய்ப்புக்கு அரசு என்ன திட்டம் வைத்துள்ளது. மாநில அரசு அழுத்தம் தராமல் மத்திய அரசிடம் நிதி பெறுவது சாத்தியம் இல்லை.

அம்மா அரசு மதுக்கடைகளை எப்போது மூடும்; பருவ மழை முன்னெச்சரிக்கையாக என்ன செய்யப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்னை குறித்து விவாதிக்காமல் மூன்றே நாளில் கண்துடைப்பாக சட்டசபை கூட்டத்தை நடத்தி முடிப்பது ஏன்; தமிழக அரசு பதில் தருமா? இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (71)

 • srinivasan - stockholm,சுவீடன்

  ஹஸன் பாய் , அமைதி. அமைதி. குடும்பம் சந்தி சிரிக்குது.

 • Covaxin (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) - Bharat Hindustan,இந்தியா

  காமகாசனுக்கு மிகவும் பிடித்த மாநிலமான கேரளாவில் 'நீட் தேர்வுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை... நீட் தேர்வை வரவேற்று சந்தோஷமாக எழுதுகிறார்கள்... நீட் தேர்வை ஏன் எதிர்க்கவில்லை என்று அங்கே பிரியாணி விஜயனை கேட்கவேண்டியது தானே... தேர்தல் வரட்டும்... அநீதி மையத்தை தமிழக மக்கள் கையை கழுவி கழுவி ஊற்றுவார்கள்...

 • Siva Kumar - chennai,இந்தியா

  இந்த கமால் எல்லாம் அரசியலுக்கு வந்து மக்களுக்கு ஒரு நல்லதும் செய்ய போவது இல்லை.

 • S. Narayanan - Chennai,இந்தியா

  கமலுக்கு பிக் பாஸ் வேலை இல்லையா. அவ்வப்போது நான்தான் இருக்கேன்ல்ல என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். பாவம். யாரும் கேட்பதாக இல்லை.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  விடுங்க பாஸ். நமக்குத்தான் ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு வேணும்ல. இந்த சீமான், வைகோ, டிடிவி தினகரன், கமல்ஹாசன், திருமாவளவன், ஜவாஹருல்லா, முத்தரசன் போன்றவர்கள் இருந்தால்தான் அரசியல் களைகட்டும்.

Advertisement