Advertisement

செந்தில் பாலாஜியுடன் கூட்டு சேர்ந்து மோசடி; ஓய்வு போக்குவரத்து அதிகாரிகளுக்கு சம்மன்

Share
சென்னை : தி.மு.க. - எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியுடன் கூட்டு சேர்ந்து 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீசார் 'சம்மன்' அனுப்பியுள்ளனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. - எம்.எல்.ஏ.வாக இருப்பவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2011 - 15 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.அப்போது போக்குவரத்து அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து சென்னையை சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்ட 81 பேருக்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கித் தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு சென்னையில் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த மோசடி தொடர்பாக செப்.11ல் சென்னை ஜெ.ஜெ. நகரில் வசிக்கும் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் கணேசன் வீடு உள்பட 10 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல மணி நேரம் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியுடன் கூட்டு சேர்ந்து மோசடி செய்தது தொடர்பாக 18ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பர்ட் தினகரன் உட்பட 3 அதிகாரிகளுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஜன.31ல் கரூர் மாவட்டத்தில் உள்ள செந்தில்பாலாஜி அவரது சகோதரர் வீடு அலுவலகம் என 17 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • m.viswanathan - chennai,இந்தியா

  இது போன்ற நபர்களை , தேர்தலில் ஏன் வெற்றி பெற செய்ய வேண்டும் , கொள்ளை அடிக்க வேண்டும் என்றே , கட்சியில் சேர்வதும் , அடுத்த கட்சிக்கு தாவுவதும் , இவன் பிழைக்கும் வழியை தெரிந்து மக்களை விழுங்கும் மலை பாம்பு

 • dina - chennai,இந்தியா

  ஏன்டா ஏழைகளின் பணத்தை மோசடி செய்து வைத்தெரிச்சலை கொட்டிக்கிறீங்க, திறமை இருந்ததால் வேலை இல்லையேல் வீடு, போகும் பொது தலை மேலே என்ன கொண்டு போகப்போகிறீங்க

 • Baskar - Paris,பிரான்ஸ்

  கருது எழுதும் நண்பர்களுக்கு ஒரு வேண்டு கோல். செந்திலை திட்டாதீர்கள் பாவம் அவர் . ஒரு பைசா கூட திருடவில்லை. அப்படியே திருடி இருந்தாலும் தற்போது அந்த பணமெல்லாம் இப்போது ஸ்டாலினிடம் கொடுத்து தான் கட்சியில் சேர்ந்தார். அது போகட்டும் தாய்மை நீதிபதி மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம். எனவே இருக்கிற வழக்குகளை இந்த வருடகடிசியில் முடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் இது போன்ற வழக்குகளை விரைந்து முடித்து தீர்ப்புகளை வழங்கி தண்டனையை கொடுக்கவும்.

 • kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,இந்தியா

  திருடர்களுக்கும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கிடைக்கும் இடம் டீம்கா கம்பெனி திருட்டு திமுக வேணாம் போடா

 • Murthy - Bangalore,இந்தியா

  செந்தில் பாலாஜி அடுத்து வரும் திமுக அரசில் அமைச்சர் பதவி பெறக்கூடாது என்று இன்றய போக்குவரத்து துறை அமைச்சர் (விஜயபாஸ்கர்) செய்யும் சில வேலைகள்தான் இது. இது நடக்காது அடுத்த தேர்தலில் விஜயபாஸ்கர் டெபாசிட் வாங்க மாட்டார்.

  • sivam - baghram,ஆப்கானிஸ்தான்

   இது வேற நினைப்பா? எப்படி உங்களால எல்லாம் இப்படி சொல்லமுடியுது? ...கனவு கண்டா வெளில சொல்லக்கூடாதுனு சொல்லுவாங்க, அதுனால கொஞ்சம் அடக்கி வாசிங்க

Advertisement