Advertisement

கொரோனா தடுப்பு பணியாளரை தாக்கினால் 2 ஆண்டு சிறை நிச்சயம்

Share
சென்னை : கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை புதைக்கவும், எரியூட்டவும் எதிர்ப்பு தெரிவித்தால், மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில், தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதேபோல, கொரோனா நோய் தடுப்பு பணியாளரை தாக்கினாலும், இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக சட்டசபையில், சுகாதார துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தாக்கல் செய்த சட்ட திருத்த மசோதா:கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை புதைக்கவும், எரியூட்டவும், பொதுமக்கள் சிலர் தடுக்கும் நிகழ்வுகள் நடந்தன. எனவே, இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது.இந்தச் சட்டம், 2020ம் ஆண்டு, தமிழக பொது சுகாதார திருத்த சட்டம் என்று அழைக்கப்படும். தானாகவோ அல்லது ஒரு குழுவின் உறுப்பினராகவோ இருந்து, அறிவிக்கை வெளியிடப்பெற்ற நோயால், பாதிக்கப்படும் போது இறந்து விட்டால், அவரது உடலை புதைக்கவோ, எரியூட்டவோ யாரும் இடையூறு செய்யக்கூடாது.

அவ்வாறு இடையூறு செய்யும் நபர் எவருக்கும், ரொக்கத் தொகையுடன் கூடிய அபராதத்துடன், ஓர் ஆண்டில் இருந்து மூன்றாண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் .இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த சட்ட திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பில், ஒரு மனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இது, உடனடியாகநடைமுறைக்கு வந்துள்ளது.இதேபோல, பேரிடர் தொற்று நோய் தொடர்பாக அறிவிக்கப்படும், பொது முடக்கம் மற்றும் கட்டுப்பாட்டு விதிகளை பொதுமக்கள் மீறினால், அவர்களுக்கு தண்டனை வழங்கும் சட்ட திருத்தமும் நேற்று நிறைவேற்றப்பட்டது.

தொற்று நோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள பணியாளர் ஒருவருக்கெதிராக யாராவது வன்முறை செயலில் ஈடுபட்டால், அவருக்கும், உடந்தையாக இருப்பவர்களுக்கும், மூன்று மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.மேலும், 1௦ ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை, அபராத தொகையும் வசூலிக்கப்படும் என, சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா

    இத முதல்ல செய்திருக்க வேண்டாமா ? அவர்கள் அடிபட்டு உதைபட்டு அவமானப்பட்டு இப்போது மக்கள் புரிந்து கொண்ட பின் நிதானமாக வருகிறது.

  • ஆப்பு -

    மக்களை முடக்கி லத்தியால் அடிச்சு வாகனங்களை பறிமுதல் செஞ்சவங்க ஜாலியா சம்பளம் வாங்கிட்டாங்க. வருஷம் 2 கோடி பேருக்கு வேலையும் குடுத்திட்டாங்க.

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    சிறை தண்டனைக்கு பதில் கோரோனோ பாதித்தவர்களுக்கு சேவை செய்ய சொல்லலாம் ..

  • Ram -

    Appo mask pottukkonnu solravangalai thaakkinaalum indha sattam nadaimuraikku varumaa?

Advertisement