Advertisement

ராமர், லட்சுமணர், சீதை சிலைகள் லண்டனில் இருப்பது கண்டுபிடிப்பு

Share
சென்னை;தமிழக கோயிலில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி வெண்கல சிலைகள் லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்தவர் விஜயகுமார். சிங்கப்பூரில்வசித்து வரும் இவர் சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் வாயிலாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க போலீசாருக்கு உதவி செய்து வருகிறார்.
அந்த வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள டீலர் ஒருவர் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் சிலைகளின் படங்களை வெளியிட்டார்.அவற்றில் தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் இருப்பதை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்த படங்களை ஆய்வு செய்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பினர்.

அந்த படங்களில் இருப்பது மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற ஊரில் உள்ள கோயிலில் இருந்து 1978ல் திருடப்பட்ட ராமர், லட்சுமணர் மற்றும்சீதா பிராட்டி வெண்கலசிலைகள் என்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.
மேலும் அதற்கான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர். தகவல் அறிந்து அந்த டீலர் ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளையும் லண்டன்அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். சிலைகளை தமிழகத்திற்கு எடுத்து வர இந்தியதொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (36)

 • Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா

  இவ்வளவு பேர் திராவிடக்கட்சிகளை சாடி எழுதுகிறீர்களே அப்படியும் அவர்கள்தானே தமிழ்நாட்டில் கோலோச்சுகிறார்கள்.

 • Tamilnesan - Muscat,ஓமன்

  திருடர்களின் கூடாரமாகிவிட்டது தமிழ்நாடு.

 • திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

  மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற ஊரில் உள்ள கோயிலில் இருந்து 1978ல் திருடப்பட்ட ராமர், லட்சுமணர் மற்றும்சீதா பிராட்டி வெண்கலசிலைகள் - செய்தி 31-Jan-76 முதல் 27-Jan- 89 வரை பதிமூன்று ஆண்டுகள் DMK ஆட்சியில் இல்லை 30-Jun-77 முதல் 30-Jan-88 வரை பதிமூன்று ஆண்டுகள் அதிமுக ஆட்சி

  • Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா

   இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். சிலைகள் திருட்டு, பாறை சுரண்டல், ஆற்று மண் சுரண்டல், கடல் மணல் சரண்டல் இவைகளில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை எவருக்கு வக்காலத்து வாங்குகிரீர் ஐயா?

  • திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

   அபச்சாரம் அபச்சாரம் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் வள்ளல் MGR ஆட்சியை குறை சொல்வதா? அவர் ஆட்சிக்கு ஈடு இணை இல்லை? அவர் எத்தனையோ கல்வி தந்தையை உருவாக்கியவர்

 • Tamilnesan - Muscat,ஓமன்

  திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் சாதனை......சும்மாவா சொன்னார் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர், இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று.

 • ஆரூர் ரங் -

  புதுச்சேரி FRENCH INSTITUTE OF PONDICHERRY பழங்கால தமிழகக் கோவில் விக்ரஹம் தூண் ஒலைச்சுவடி தாமிரப் பட்டயம் போன்றவற்றை பெருமளவில் ஆவணப்படுத்தி வைத்துள்ளது. அதன் உதவியால்தான் பெரும்பாலான் களவுபோன கோவில் சிலைகள் அடையாளம் காணப்பட்டு ஆதாரமாகக் காட்டப்பட்டு திரும்பக் கொண்டுவர முடிகிறது. ஃபிரஞ்சுக் காரர்களுக்கு இருந்த ஆர்வமும் அக்கறையும் 😎😎திராவிஷ😎😎 அரசுகளிடம் இல்லை. ஆவணம் இருந்தால் கோவில் சொத்துக்களை ஆட்டயப் போடமுடியாதே . வடக்குபட்டி😉 ராமசாமி சீடர்களிடம் போனால் போனதுதான்

  • மணி - புதுகை

   அடப்பாவி, ஆட்டைய போட்டு கொண்டு போறதெல்லாம் யாருன்னு தெரிஞ்சுமா இப்பிடி ஒரு கருத்து?

Advertisement