Advertisement

இந்திய துாதரின் வெள்ளி கிரக பாடல்

Share
நியூயார்க்: கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான மடகாஸ்கர் மற்றும் கோமரோசுக்கான இந்திய துாதர், அபய் குமார் கவிஞரும் கூட. இவர், பூமி, சந்திரன், செவ்வாய் உள்ளிட்ட கோள்கள் குறித்து பாடல்கள் இயற்றி, வயலின் வித்வான், எல்.சுப்ரமணியம் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில், வெள்ளி கிரகத்தின் தன்மைகளை, பூமியுடன் ஒப்பிட்டு பாடல் இயற்றி வெளியிட்டார்.அதற்கேற்ப, வெள்ளி கிரகத்தில், நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதாக, சில தினங்களுக்கு முன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிராணவாயு பற்றாக்குறையின் போது, நுண்ணுயிர் களால் உருவாகும், 'பாஸ்பைன்' என்ற பொருள், வெள்ளி கிரகத்தின் மேற்பகுதியில் உள்ளதை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement