Advertisement

இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே டிரம்ப் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

Share
வாஷிங்டன்: பல ஆண்டுகளாக நீடித்து வந்த இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில், இஸ்ரேல், பக்ரைன், யு.ஏ.இ. நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானதாக தவகல் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலை தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக் , சிரியா, மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் கடந்த 1979-ல் எகிப்தும், 1994-ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் திடீரென அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன. தற்போது வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு யு.ஏ.இ.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இரு நாடுகளும் தங்கள் உறவில் சுமூக நிலையை உருவாக்கவும் தூதரங்களை ஏற்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளன. . இருநாடுகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை விரைவில் கையெழுத்தாகும் என செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் இன்று இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
வெள்ளை மாளிகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ, யு.ஏ.இ. வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் ஜியாத் நெஹ்யான், பக்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் ஜியானி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    இது ஒரு நல்ல தொடக்கம்.

  • vayalum vazhvum-saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர்

  • ஆரூர் ரங் -

    பஹ்ரேய்னை தூண்டிவிட்டு நூல் விட்டுப்😉 பார்க்கிறது சவூதி. ஆனால் உள்நாட்டு பழைமை வாதிகள் ஏற்பது கடினம். அடிதடி வழிப்பறியில் தோன்றிய மூர்க்கம் அவ்வளவு எளிதில் இஸ்ரேலை ஏற்காது.

  • Anand - chennai,இந்தியா

    பாகிஸ்தான், துருக்கி மற்றும் ஈரான் இந்த ஒப்பந்தத்தை மிக கடுமையாக விமர்சித்து தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும்....

  • K.ANBARASAN - muscat,ஓமன்

    கூடிய விரைவில் கத்தார் குவைத் ஓமான் நாடுகளையும் எதிர்பார்க்கலாம். சவூதி அரேபியாவிற்கும் இந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் பெரிய நாடு என்பதாலும் இஸ்லாமிய நாடுகளுக்கு தலைமைத்துவ நாடாகவும் இருப்பதாலும் யோசிக்கிறது. மாறி வரும் உலகில் பகைமை பாராட்டிக்கொண்டே இருக்க முடியாது என்று அரபு நாடுகள் உணர துவங்கி விட்டன. கச்ச எண்ணெய் விலை குறைவு. சூரிய மின்சக்தி மின்சார கார் உற்பத்தி ஆரம்பம். ஆகிய காரணங்களால் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்து விட்டது. இதனால் ஏற்படபோகும் விளைவுகளை உணர்ந்து அரபு நாடுகள் செயல் படுவது புத்திசாலித்தனமான ஒன்று .

Advertisement