Advertisement

தமிழக பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் 96 சதவீத கேள்விகள்

Share
சென்னை :சமீபத்தில் நடந்த, 'நீட்' தேர்வில்,தமிழக பாட திட்டத்தில் இருந்து, 96 சதவீத கேள்விகள் இடம் பெற்றதாக, தமிழக ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு, செப்., 13ல், நாடு முழுவதும் நடந்தது. தேர்வில், தமிழகத்தில், ஒரு லட்சம் பேர் உட்பட, 14 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்த தேர்வில், மொத்தம், 180 வினாக்கள் இடம் பெற்றன. உயிரியலில், விலங்கியல் மற்றும் தாவரவியலில், தலா, 45 வினாக்கள்; இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா, 45 வினாக்கள் இடம் பெற்றன.
ஒவ்வொரு வினாவுக்கும், தலா நான்கு மதிப்பெண் வீதம், மொத்தம், 180 வினாக்களுக்கு, 720 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் பெரும்பாலும், மத்திய அரசின், என்.சி.இ.ஆர்.டி., என்ற, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன புத்தகத்தில் இருந்தே, கேள்விகள் இடம் பெற்றதாக, மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
இந்த பாட திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களே அதிகம் பின்பற்றுவதால், அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் அதிகம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டிலும் சேர்த்து, புதிய பாட திட்டம் அமலான பின் நடக்கும் நீட் தேர்வு என்பதால், தமிழக பாட திட்ட புத்தகங்களுடன், நீட் தேர்வு வினாக்களை ஆசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
இதில், 96 சதவீத வினாக்கள், தமிழக பாட திட்டங்களில் இருந்து இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. உயிரியலில் மொத்தம், 90 வினாக்களில், 87 வினாக்கள், தமிழக பாட திட்டத்தில் இருந்து இடம் பெற்றுள்ளன.
இயற்பியல் மற்றும் வேதியியலில், 45க்கு தலா, 43 வினாக்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம், 180 வினாக்களில், 173 வினாக்கள் நேரடியாக தமிழக பாட திட்ட புத்தகத்தில் இருந்து இடம் பெற்றுள்ளதாக, நீட் பயிற்சி அளித்த தமிழக ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த தகவல், தமிழக ஆசிரியர்களின், 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் பரவுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Balakrishnan - Bangalore,இந்தியா

    அறிவியல் பாடம் இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் ஒரே போல் தான் இருக்கும். பாடத்திட்டத்தில் பல வருடங்களாக மாநில பாடத்திட்டத்தில் தேவையான மாற்றங்கள் செய்யாமல் CBSE பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்கிறார்கள் என்று புலம்பியது மாணவர்களை ஏமாற்றிய செயல் என்பது கண்கூடு. வரலாற்றை வேண்டுமானால் திராவிட காட்சிகள் மாற்றி அமைத்து UNESCO விருது பெற்றுக்கொள்ளட்டும் . ஆனால் அறிவியல் அனைவருக்கும் பொதுவானது. அதை மாநில அறிவியல் CBSE அறிவியல் என்று பிரிக்க முடியாது. அமைச்சர் செங்கோட்டையன் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வந்து பதினொன்றாம் வகுப்பு பாடங்களையும் மக்களை தேர்வு வைத்ததன் மூலம் படிக்க செய்தது பாராட்டுக்குரியது. பனிரெண்டாம் வகுப்பு பாடங்களை 2 வருடங்கள் படித்து (11,12) தேர்வில் மனப்பாடம் செய்து எழுதினாலும் மதிப்பெண்கள் பெறுவது போல் இருந்த ஒரு சிஸ்டத்தை மாற்றி அமைத்ததன் விளைவு இன்று தமிழக மாணவர்களும் நல்ல முறையில் NEET எழுத முடிந்திருக்கிறது.

  • babu -

    இதிலிருந்தே தெரியவில்லையா? எவ்வளவு பெரிய அநீதி என்று.

  • Ganesh G - Hyderabad,இந்தியா

    இதுக்குத்தான் இந்தியா முழுவதும் ஒரே கல்விக் கொள்கை வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதைத்தான் புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. வடக்கான் மட்டும் எழுதி பாஸ் ஆகிட்றான் என்றால் அவன் ஹிந்தி படிக்கிறான். அப்ப நீயும் ஹிந்தி படிக்கிறியா?

  • shyamnats - tirunelveli,இந்தியா

    நாடு முழுவதும் ஒரே கல்வி, நாடு முழுவதற்கும் மருத்துவ கல்வி பயில ஒரே மாதிரி நீட் தேர்வு கட்டாய மாக்க பட வேண்டும். இத60னாலேயே ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களில் இருந்து டாக்டர்கல் உருவாக வாய்ப்பு உண்டு. அறுப து எழுபது லட்சங்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பது தடுக்கப்படும்.

    • ஆரூர் ரங் - ,

      நடுத்தரக் குடும்பத்தில் டாக்டருக்குப் படிச்சவனெல்லாம் 5 ரூபாய்க்கா வைத்திய்ம் பார்க்கிறார் ? படிச்சு முடிச்சவுடனே பாதை மாறிடுதே

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அதுக்குள்ளே நீட் சி.பி.எஸ் சி மாணவர்களுக்கு தான் நன்மை செய்கின்றது .என்று உடன் பிரபுக்கள் கதைவுட்டாங்களே

Advertisement