Advertisement

தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து திரும்ப பெற்றது ரூ.83.82 லட்சம்

Share
மதுரை,: மதுரை மாவட்டத்தில் பிரதமர் வேளாண்மை உதவித்தொகை திட்ட மோசடியில் நேற்று வரை தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து ரூ.83.82 லட்சம் திரும்ப பெறப்பட்டது. மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இம்மாவட்டத்தில் இத்திட்டத்தில் 16 ஆயிரத்து 476 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதில் 11,135 பேர் தகுதியற்ற விவசாயிகள் என கண்டறியப்பட்டது. வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் மேற்பார்வையில் 13 ஒன்றியங்களில் துணை இயக்குனர்கள் தலைமையில் விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். வங்கி அதிகாரிகளுடன் இணைந்து 2681 தகுதியற்ற விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இருந்து நேற்று வரை ரூ.83.82 லட்சம் வரை திரும்ப பெற்றனர்.

இந்நிலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியற்ற விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ஜீரோ பேலன்ஸ் இருப்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற விசாரணை குழுவினர் கிராமங்களில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: பயனாளிகள் நேரடியாக இத்திட்டத்தில் பதிவு செய்யலாம் என்பதை பயன்படுத்தி இன்டர்நெட் சேவை மையத்தினர், சில கீழ்நிலை அதிகாரிகள் தகுதியற்றவர்களின் விவரங்களை பதிவு செய்து பணத்தை பெற்று கொடுத்துள்ளனர். இதற்காக குறிப்பிட்ட தொகையை வசூலித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரிரு நாட்களில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • bigu -

    திரும்ப பெற்றது என்று அவங்களே (ஆட்சியாளர்களே )சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்

Advertisement