Advertisement

பொறியாளர்களை அலைக்கழிக்கும் மின் வாரிய அதிகாரி!

Share
பொறியாளர்களை அலைக்கழிக்கும் மின் வாரிய அதிகாரி!


நாளிதழை மடித்தபடியே, ''அரசு விழாவை அரசியலாக்கிட்டாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.
''எங்கங்க...'' எனக் கேட்டார்,
அந்தோணிசாமி.
''கொரோனா பாதிப்பால, இந்த வருஷம், அந்தந்த மாவட்டங்கள்லயே நல்லாசிரியர் விருதுகளை வழங்க சொல்லிட்டாங்கல்ல... மதுரையில, ராஜு, உதயகுமார்னு ரெண்டு அமைச்சர்கள் இருக்காங்க...
''ரெண்டு துருவங்களா இருக்கிற இவங்களை ஒருங்கிணைக்க முடியாம, அதிகாரிகள் ரொம்பவே சிரமப்பட்டாங்க... ஒரு வழியா, போன, 12ம் தேதி விழாவை நடத்தினாங்க பா...
''ஆனாலும், விழா துவங்குறதுக்கு முன்னாடியே, ஆசிரியர்களை அமைச்சர் உதயகுமார் சந்திச்சு, பொன்னாடை போட்டு, வாழ்த்திட்டு போயிட்டார்... அப்புறமா சோழவந்தான் எம்.எல்.ஏ., மாணிக்கம், தனியா வந்து ஆசிரியர்களை வாழ்த்துனாரு பா...
''கடைசியா, அமைச்சர் ராஜு தலைமையில, கலெக்டர் விழாவை நடத்துனாரு... இதுல, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.,வும் கலந்துக்கிட்டாரு... இவங்க கோஷ்டி கானத்துல சிக்கி, அதிகாரிகள் தவிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்குதுங்க...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், அந்தோணிசாமி.
''உரம் இல்லாம, எந்த ஊர் விவசாயிகள் சிரமப்படறா ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.
''நீலகிரி மாவட்டத்துல நல்ல மழை பெய்து, விவசாய தோட்டங்களுக்கு உரம் போடுறதுக்கு ஏதுவான சூழல் நிலவுதுங்க... ஆனா, மாவட்டத்துல, யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு இருக்குதுங்க...
''மாவட்ட உரம் மற்றும் மருந்து
தர ஆய்வாளர் தான், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப, அரசுக்கு தகவல் அனுப்பி, உரங்கள் கொண்டு வர ஏற்பாடு செய்யணும்...
''ஆனா, அதுக்கு எந்த முயற்சியும் எடுக்காம, குறைவா வர்ற யூரியாவை கூட, பெரிய எஸ்டேட்களுக்கு, மொத்தமா விற்பனை செய்துடுறாங்க... இதனால, பாதிக்கப்பட்ட விவசாயிகள், வேளாண் துறை அமைச்சருக்கு புகார் அனுப்பியிருக்காங்க...'' என்றார்,
அந்தோணிசாமி.அந்த வழியே சென்ற பெண்ணிடம், ''ரோகிணி வேலைக்கு கிளம்பிட்டேளா...'' என, நலம் விசாரித்த குப்பண்ணா, ''பதவி உயர்வு வந்தும், பலனில்லாம தவிக்கறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.
''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தமிழக மின் வாரியத்துல, போர்மேன், 65 பேர், தொழில்நுட்ப உதவியாளர், 185 பேருக்கு, சமீபத்துல, இளநிலை பொறியாளர் நிலை - 2 பதவி உயர்வு குடுத்தா... அந்த பட்டியல்ல, 16 பேரை, சேலத்துக்கு ஒதுக்கீடு செஞ்சா ஓய்...
''இவாள்லாம், சேலம் வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகத்திடம், பணியிடம் கேட்டு மனு குடுத்திருக்கா... அதை கையால கூட தொடாத அவர், 'மொதல்ல, பழைய இடத்துல இருந்து, 'ரிலீவ்' ஆகிட்டு வாங்கோ'னு சொல்லிட்டாராம் ஓய்...
''ஆனா, 'புது பணியிடம் ஒதுக்கி குடுத்தா தான், அந்த உத்தரவை காட்டி, 'ரிலீவ்' ஆக முடியும்'னு சொல்லியும், அவர் கேட்கலை... தமிழகம் முழுக்க, 43 மின் வட்டங்கள்ல, 42ல பணியிடம் ஒதுக்கிட்டா ஓய்...
''ஆனா, சேலத்துல மட்டும் ஒதுக்கலை... இது சம்பந்தமா, வாரிய தலைவர் வரைக்கும் புகார் போயிருக்கு ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • A R J U N - sennai ,இந்தியா

    .......'ரிலீவ்' ஆகிட்டு வாங்கோ'னு சொல்லிட்டாராம் ஓய்...ஒருவேளை 'கொஞ்சம்' ரிலீஸ் பண்ணி இருந்தா குடுத்திருப்பாரோ என்னவோ...பழக்க தோஷம்..

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பாவம், அவர் 'எதிர்பார்ப்பு' என்ன என்றுகூடப் புரிந்துகொள்ளாத வெள்ளந்திகளாக இருக்கிறார்களே. சேர வேண்டியது கிடைத்ததும், ரிலீவிங், ரிஸீவிங் இரண்டும் வளமாக்கி வேலை தானே நடக்கும்

Advertisement