Advertisement

டவுட் தனபாலு

Share
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா, ஹிந்தி மொழி இந்நாட்டை ஒருங்கிணைப்பதாக கூறி இருக்கிறார். பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி, எப்படி ஒருங்கிணைக்க முடியும்... ஹிந்தியை காப்பாற்றுவதை விட, கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியரை காப்பாற்றுவதில், அவர் கவனம் செலுத்த வேண்டும்.


@@'டவுட்' தனபாலு: ஹிந்தியை, அமித் ஷா காப்பாற்ற முயற்சிக்கிறார் என கூறி, அவருக்கு எதிராக, தமிழக விசிலடிச்சான் குஞ்சுகளை திசை திருப்பி விட முயற்சிக்கிறீர்கள் என்பது, 'டவுட்' இன்றி தெரிகிறது. கொரோனாவிலிருந்து, அமித் ஷாவால் மட்டுமல்ல, யாராலும் காப்பாற்ற முடியாது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களோ என்ற, 'டவுட்'டும் வருகிறது!


தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: தமிழகத்தில், பால் உற்பத்தி, கொள்முதல் போன்றவற்றில், எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் இருக்க, அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். இடைத்தரகர்களால், பால் நுகர்வோர் ஏமாற்றப்படுவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



'டவுட்' தனபாலு: தமிழக பால் உற்பத்தியாளர்கள் மீதும், நுகர்வோர் மீதும் உங்களுக்கு இருக்கும் நல்லெண்ணம், இதனால், அனைவருக்கும், 'டவுட்' இன்றி புரிந்திருக்கும். எனினும், இது தானே, அந்த துறை அதிகாரிகளின் பொறுப்பு; இதை, அமைச்சரான நீங்கள் அடிக்கடி உணர்த்த வேண்டுமா என்ற, 'டவுட்'டும் வருகிறது!



தமிழக மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார்:
மாணவர்கள் நலனை குழிதோண்டி புதைத்தது, தி.மு.க., - - காங்கிரஸ் கூட்டணி. அவர்கள் ஆட்சியில் இருந்த போது, 'நீட்' தேர்வை கொண்டு வராமல் இருந்திருந்தால், இந்த பிரச்னை வந்திருக்காது. அதை மறைத்து விட்டு, பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல, தி.மு.க., பேசுவது, வேடிக்கையாக உள்ளது.



'டவுட்' தனபாலு: நீட் தேர்வு மட்டுமல்ல, தமிழக நலனுக்கு எதிரான பல திட்டங்களுக்கு ஆப்பு வைத்தது அந்த கூட்டணி தான் என்பதில், தமிழக மக்களுக்கு, 'டவுட்'டே வராது. எனினும், அரசியல் காரணங்களுக்காக, மாணவர் நலனை சீரழிக்கும் வகையில் செயல்படுவது, எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்பதிலும், மாற்றுக் கருத்து இருக்க முடியாது!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இவர் என்னமோ நீட்டுக்காகக் கடிதம் எழுதினேன் என்று நீட்டி முழங்கினார் அங்கு பருப்பு வேகவில்லை. கையாலாகாத்தனத்தை சும்மா குரலை எழுப்பி சமாளிக்கிறார். அடுத்த ஆண்டே வந்த உங்க அம்மாவால் கூட முடியவில்லையா, அல்லது அவரே தேர்வு தான் நல்லது என்று தீர்மானித்து விட்டாரா?

  • tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ

    அமித் ஷகிலாகிய உள்துறை அமைச்சர். அவர் சுகாதார மருத்துவ அமைச்சர் இல்லை. அப்படி இருக்க அவர் எப்படி கரோனா பற்றி பேசமுடியும். அப்படி பேசி இருந்தால் நீங்கள் மருத்துவரை என்று மடக்கி இருப்பீர்கலே

Advertisement