Advertisement

இம்மாதம் மாதிரி சாலை ரெடியாகணும்: மாநகராட்சி கமிஷனர் கறார் உத்தரவு

Share
கோவை:ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் மேற்கொள்ளப்படும், 'மாதிரி சாலை' பணியை நேரில் ஆய்வு செய்த, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், ஒரு கி.மீ., துாரத்தை இம்மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தினார்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.24.36 கோடியில், கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில், சுக்ரவாரப்பேட்டை சந்திப்பு முதல் கவுலி பிரவுன் ரோடு சந்திப்பு வரை, 1.8 கி.மீ., துாரத்துக்கு, 'மாதிரி சாலை' ஏற்படுத்தப்படுகிறது.
எதிர்காலத்தில் எந்தவொரு காரணத்துக்கும், ரோட்டை தோண்டக்கூடாது என்பதற்காக, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் பதிப்பது, மின் ஒயர் மற்றும் தொலைத்தொடர்புத்துறை ஒயர்களை கொண்டு செல்ல, தனி கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.இத்திட்டம், 2016ல் துவக்கப்பட்டது. மாநகராட்சிக்கு, மற்ற அரசு துறைகள் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால், நான்கு ஆண்டுகளாக, இழுத்துக் கொண்டே வருகிறது.இவ்விஷயத்தை கேள்விப்பட்ட, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், நேற்று கள ஆய்வுக்குச் சென்றார்.
'முதல்கட்டமாக, திருவேங்கடசாமி ரோடு சந்திப்பு வரை, ஒரு கி.மீ., துாரத்துக்கான பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். குழி தோண்டினால், மண்ணை குவியல் குவியலாக குவித்து வைக்காமல், சமப்படுத்த வேண்டும். குழாய்களை அதே பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக போட்டு, போக்குவரத்துக்கு இடையூறு செய்யாதீர். தேவையான அளவு குழாயை மட்டும் எடுத்து வந்து, அருகில் உள்ள தெரு ஓரத்தில் வைத்திருங்கள்.'அனைத்து ரோட்டையும் ஒரே நேரத்தில் தோண்டாதீர்கள். ஒரு தெருவில் முடித்து விட்டு, அடுத்த தெருவுக்குச் செல்லுங்கள். எந்தவொரு பணி செய்தாலும், மாநகராட்சி பொறியாளர்கள், குடிநீர் பிரிவினர், மின்வாரியத்தினர் கலந்து ஆலோசித்து செய்ய வேண்டும். ரோடு போட்ட பின், குழாய் பதிக்கப் போவதாக கூறி, தோண்டக்கூடாது' என, அறிவுறுத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement