Advertisement

அண்ணாதுரை தீர்மானங்களுக்கு ஆபத்து வருகிறது

Share
சென்னை : ''அண்ணா தந்த தீர்மானங்களுக்கு, தற்போது ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தை நொறுக்கும் வகையில், நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - நரசிம்மன்: திருத்தணி தொகுதி, மத்துார் கிராமத்தில், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் தங்கமணி: தற்போது, அப்பகுதியில் மின் அழுத்த குறைபாடு இல்லை. எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும்.
நரசிம்மன்: நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. எனவே, அங்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். அதேபோல், திருத்தணியிலும் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் தங்கமணி: மத்துார் கிராமத்தில், இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இடம் கிடைத்ததும், துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: இந்த சட்டசபையில், இரு மொழி கொள்கை, மாநில சுயாட்சி, தமிழ்நாடு பெயர் சூட்டி, தீர்மானங்களை நிறைவேற்றியவர், அண்ணாதுரை.
அவரால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு, தற்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது.
அந்த ஆபத்தை நொறுக்கும் வகையில், நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும் என்ற உறுதியை, அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.சென்னை, கொளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, நேர்மை நகரில், துணை மின் நிலைய பணியை விரைவாக முடிக்க வேண்டும். கணேஷ் நகரில், துணை மின் நிலையம் அமைக்கும் பணியை துவக்க வேண்டும்.


அமைச்சர் தங்கமணி: நேர்மை நகரில், துணை மின் நிலையம் அமைக்கும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கொரோனா காரணமாக, பணி நிறுத்தப்பட்டது; விரைவில், பணி முடிக்கப்படும்.கணேஷ் நகரில், துணை மின் நிலையம் அமைக்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. அந்தப் பணியும் விரைவாக துவக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

எல்லாவற்றிலும் பொய் கணக்குஇணையதளம் வாயிலான உறுப்பினர் சேர்க்கையை, தி.மு.க., முப்பெரும் விழாவில், அக்கட்சி தலைவர், ஸ்டாலின் துவக்கி வைத்தார்.தி.மு.க., முப்பெரும் விழா, சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்தது. ஈ.வெ.ராமசாமி விருது - மா.மீனாட்சிசுந்தரம்; அண்ணாதுரை விருது - அ.ராமசாமி; கருணாநிதி விருது - உபயதுல்லா; பாவேந்தர் விருது - தமிழரசி; அன்பழகன் விருது - சுப.ராஜகோபால் ஆகியோருக்கு, ஸ்டாலின் வழங்கினார்.
'எல்லாரும் நம்முடன்' என்ற தலைப்பில், இணையதளம் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியையும், ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின், உறுப்பினராக சேர்ந்த இளம்பெண்ணுக்கு, உறுப்பினர் அட்டை வழங்கினார். விழாவில், பொதுச்செயலர் துரைமுருகன் பேசுகையில், ''வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, பொதுக்குழு கூட்டத்தையே நடத்தி, ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார்,'' என்றார்.

ஸ்டாலின் பேசியதாவது:
கொரோனா காலத்தில், உலக அளவில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கூட்டம் நடத்திய, இரண்டாவது கட்சியாக தி.மு.க., திகழ்கிறது. தமிழகத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, ௫ லட்சத்தை தாண்டி விட்டது; ௮,000 பேர் இறந்துள்ளனர். இது, அரசு கொடுத்த புள்ளிவிவரம். கொள்ளை அடிப்பதிலும் பொய் கணக்கு, கொரோனா பாதிப்பு, இறப்பு எண்ணிக்கையிலும் பொய் கணக்கு தான் காட்டப்படுகிறது.


கொரோனாவை விட கொடிய ஊழல் புரியும், அ.தி.மு.க., அரசை அகற்ற வேண்டும். ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் துணிச்சல், அ.தி.மு.க., அரசுக்கு உள்ளதா? 'நீட்' தேர்வு மன உளைச்சலால், ௧௩ மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு, மத்திய, மாநில அரசுகள் தான் காரணம். மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கும், அ.தி.மு.க., ஆட்சியை துாக்கி எறிய, தமிழக மக்கள் தயாராகி விட்டனர். நாமும், இந்த முப்பெரும் விழாவில், சபதம் எடுப்போம். இவ்வாறு, அவர் பேசினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (77)

 • oce -

  திமுகவுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி விருது வழங்கி கொள்வதா. தலையில் உள்ள ஈரும் பேனும் ஒன்றை ஒன்று புகழ்ந்து கொள்வது போல் உள்ளது.

 • Balaji - Chennai,இந்தியா

  சென்னையில் அங்கங்க பெரியார் அம்பேத்கர் இருவரும் அருகருகே அமர்ந்து பேசி சிரிப்பது போல போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் எப்போதாவது சந்தித்துக்கொண்டதுண்டா? இருவரும் என்ன மொழியில் பேசி சிரித்துக்கொண்டனர்? இல்லையெனில் எதற்க்காக பொய்யான ஒரு பிம்பம் உருவாக்காப்படுகிறது? இது தான் பகுத்தறிவா? பொய் கொண்டு மூளை சலவை செய்வது பகுத்தறிவா?

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   பகுத்தறிவு என்பதே முதலில் ஒரு பித்தலாட்டம் தானே. டாஸ்மாக் டுமிலர்களை மூளை மழுங்கடித்ததே இந்த பகுத்தறிவு என்னும் விஷம் தானே.

 • g.kumaresan - Chennai,இந்தியா

  திராவிட முன்னேற்ற கழகம் நாட்டுக்கே கேடு.தமிழ் படிக்கலாம் வாடா முதலில் தமிழ் படிக்கட்டும் இவர்கள்.

 • ocean - Kadappa,இந்தியா

  டிஎம்கே வந்தா தான் நாடு செழிக்குமா. தம்பி நாடு செழிக்கவில்லை உன் கூட்டந்தான் செழித்தது.

 • ocean - Kadappa,இந்தியா

  மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டுக்கு தமிழ் எவ்வளவு முக்கியமோ அதுபோல் மற்ற மாநில மொழிகளும் அந்தந்த மாநிலங்களுக்கு முக்கியமானது. மற்ற மாநிலங்களில் மொழியை வைத்து கட்சி நடக்கவில்லை. தமிழ் நாட்டில் தான் ஒரு கட்சி தமிழை அவனுங்க அப்பன் வீட்டு சொத்து போல் தலைமேல் தூக்கி வைத்து ஆடுகிறார்கள்.

Advertisement