Advertisement

குழந்தை எரித்து கொலை தாய், மகள் கைது

Share
திருநெல்வேலி:பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தையை எரித்துக்கொன்ற தாய், மகள் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், ரயில்வே பீடர் ரோடு தியேட்டர் அருகே, நேற்று காலையில், பச்சிளம் ஆண் குழந்தை உடல் எரிக்கப்பட்டு கிடந்தது. மோப்ப நாய், சம்பவ இடத்தில் இருந்து சங்கரன்கோவில் சங்குபுரத்தில், சண்முகவேல் என்பவர் வீட்டில் போய் நின்றது. போலீசார் விசாரித்தனர்.

சண்முகவேல் மகள் சங்கரகோமதி, 22, என்பவருக்கு திருமணமாகாத நிலையில், நான்கு நாட்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. இதை மறைக்க, அவரும், தாய் இந்திராணி, 47, என்பவரும் சேர்ந்து, குழந்தையை எரித்து கொன்றது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement