LOGIN
dinamalar telegram
Advertisement

அதை மட்டும் செய்றாங்க!

Share
Tamil News
'அதை மட்டும் செய்றாங்க!'


மதுரை கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஊமச்சிகுளத்தில், அ.தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம், சமீபத்தில் நடந்தது. முகாம் நடந்த திருமண மண்டபத்தில், சமூக இடைவெளியின்றி, ஆளுங்கட்சியினர் குவிந்திருந்தனர்.நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட செயலர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ., பேசுகையில், 'முதல்வர், இ.பி.எஸ்., தமிழகத்தில், 'கொரோனா' பரவாமல் தடுக்க, 'தனித்திரு, விழித்திரு, வீட்டில் இரு' என்கிறார். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினோ, 'ஒன்றிணைவோம் வா' என, கூட்டத்தைக் கூட்டி, கொரோனா பரவலுக்கு வித்திடுகிறார்' என்றார்.அங்கிருந்த நிருபர் ஒருவர், 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'ஒன்றிணைவோம் வா'ன்னு தான் சொல்லுறாரு... ஆனால் ஆளுங்கட்சியினர், அதை செய்றாங்க... கூட்டம் கூடி திருமணம் நடத்துறாங்க... கோவில் கோவிலா சுத்தி, 'போட்டோ'வுக்கு, 'போஸ்' குடுக்கிறாங்க...' என்றார். இளம் நிருபர், 'அதை மட்டும் கரெக்டா செய்றாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement