Advertisement

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவர் 4 மணி நேரத்தில் கைது

Share
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட இலஞ்சி-தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இன்று(08.09.2020) அதிகாலை 01.00 மணி அளவில் மர்ம நபர் புகுந்து இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தினால் திரும்பி சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த குற்றாலம் போலீசார், ஏடிஎம் அறையிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருட்டில் ஈடுபட்டது இலஞ்சி வேளாளர் தெருவைச் சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் முத்து (19) என்பது தெரியவந்தது. பின்னர் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். திருடனை நான்கு மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement