LOGIN
dinamalar telegram
Advertisement

ஜொலிக்கும் சொப்பன சுந்தரி மயக்கும் மணிஷா யாதவ்

Share
Tamil News
தமிழில், 'வழக்கு எண் 18/9'ல் அறிமுகமாகி 'ஆதலால் காதல் செய்வீர்',' ஜன்னல் ஓரம்', 'பட்டைய கிளப்பணும் பாண்டியா', ' திரிஷா இல்லைனா நயன்தாரா', 'ஒரு குப்பை கதை', 'சண்டிமுனி'... எனு அடுத்தடுத்த படங்களில் நடித்துதனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை மணிஷா யாதவ். இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் சுறுசுறுப்பாக இருப்பவர் . ரசிகர்களில் கேள்விகளை தைரியமக எதிர்கொண்டு ஜாலியாக பதில் அளித்து மனசை கொள்ளையடிப்பவர், அவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக....


* சினிமா வாய்ப்புகள்





'லாக்டவுன்'னால் புதுப்படங்களில் நடிப்பது தொடர்பான கதைகள் மட்டும் கேட்கிறேன். நாயகியை மையமாக வைத்து நல்ல கதைகள் இரண்டு கிடைத்துள்ளன. 'நார்மல்' ஆனவுடன் நடிக்க 'சூட்டிங்' கிளம்பிடுவேன்.


* நடிப்பு பற்றி





நடிப்பு என் கனவு. அது கடவுள் கொடுத்த 'கிப்ட்'. நான் உண்மையில 'லக்கி' தான். அடுத்தடுத்த படம் வாய்ப்புகள் வருகின்றன. உண்மையான உழைப்பை தருவேன்.


* நடிக்க விரும்பும் கேரக்டர்




'வழக்கு எண்' படத்தில் இருந்து எதார்த்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் தான் என் கேரக்டர்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது. ஜோதிகா போல் வித்தியாச கேரக்டர்களில் நடிக்க ஆசை.

* உங்கள் ரியல் கேரக்டர்



என் மனது என்ன சொல்லுகிறதோ அதன்படி தான் முடிவு எடுப்பது என் இயல்பு

* உங்களை கவர்ந்த நடிகைகள்



ஜோதிகா, டாப்ஸி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா எனு சொல்லிக்கொண்டே போகலாம்.

* நீங்க 'போல்டா'ன பெண்ணாமே



பெண்கள் பெரும்பாலும் 'போல்டா' தான் இருக்கனும். குறிப்பா சினிமா துறையில் அப்படி இருந்தால் தான் அவர்களுக்கு பாதுகாப்பு

*சினிமாவில் சவால்கள்



சவால்களை சந்தித்து தான் சினிமாவிற்குள் நுழைய முடியும். இது கதாநாயகிகளுக்கு கொஞ்சம் அதிகம் இருக்கு. சமத்தா இருந்தா எந்த சவால்களையும் சந்திக்கலாம்.

* லாக்டவுன் நாட்களில்



ஜாலியா குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறேன். சமையல் கத்துக்கிட்டேன். புதுப்படங்களுக்கான கதைதான் கேட்க அதுிகக நேரம் கிடைக்குது. குட்டி குதைகள் கவிதை எழுதுகிறேன்.

*அந்த... சொப்பன சுந்தரி....



ஹலோ, அதை இன்னும் மறக்கலையா, ' சென்னை 28' படத்தில் 'சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா...' என்ற பாட்டு எதார்த்தமாக அமைந்து செம 'ஹிட்' ஆகிடுச்சு. ரசிகர்கள் கொண்டாடினர். அவர்களுக்கு நன்றி. இப்பவும் என்னை ' சொப்பன சுந்தரி'னு பலர் ஜாலியாக கூப்பிடுறாங்க.

*உங்கள் ரசிகர்களுக்கு



உலகமே எதிர்கொள்ளும் இந்த கொரோனா நேரத்தில் ரசிகர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும். எப்போதும் 'பாசிட்டிவ்' ஆக நம்பிக்கையாக இருந்தால் சந்தோஷம் பக்கத்திலேயே இருக்கும்.

-வியாஸ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • R S BALA - Tiruvallur,இந்தியா

    பேட்டி சூப்பர் ...

    • rram - Thirunagar,இந்தியா

      super

Advertisement