dinamalar telegram
Advertisement

ஊரடங்கில் கிடைத்தது லீவு : உருவானது கவிதை

Share
Tamil News
ஊரடங்கு உத்தரவால், வெளியில் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி இருந்த மக்கள் பலர், மொபைல் போனிலும், 'டிவி' பார்ப்பதிலும் மூழ்கியுள்ளனர்.ஆனால் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் நல்ல புத்தகங்களை படிப்பதிலும், எழுதுவதிலும் கவனம் செலுத்தி, சிறந்த படைப்புகளை உருவாக்கி உள்ளனர்.கோவை இருகூரை சேர்ந்தவர் கவிஞர் பொன் இளவேனில். இவர் கோவை நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு, வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் ஊரடங்கின் போது வீட்டில் இந்த, 40 நாட்களில், 160 கவிதைகளை எழுதி, 'மெய்யுறுதல்' எனும் தனி நுாலாக வெளியிட்டு இருக்கிறார்.
கொரோனா பாதிப்பு காலத்தில், வெளி வந்த முதல் கவிதை நுால் இது!''எனக்கு புத்தகங்கள் படிப்பதிலும், கவிதை எழுதுவதிலும் அதிகம் ஆர்வம் உண்டு. விடுமுறை நாட்களில் மட்டும்தான் படிப்பேன்; எழுதுவேன். இந்த ஊரடங்கால் மொத்தமாக, 40 நாட்கள் விடுமுறை கிடைத்தது. வீட்டில் தனியாகதான் இருந்தேன். உறங்கும் நேரம் போக, மற்ற எல்லா நேரங்களிலும், கவிதைகள் தான் எழுதினேன்.ஒட்டு மொத்த உலகத்தையும், மரண பயத்தில் உறைய வைத்து விட்ட கொரோனா வைரஸ் பரவல் காலத்தை, கவிதையில் உறைய வைக்க வேண்டும் என, நினைத்தேன். எழுதி முடித்து விட்டேன். வாசித்து பாருங்கள்!'' என்கிறார் இளவேனில்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement