ADVERTISEMENT
திருப்புவனம்:கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் பண்டைய காலத்தில் நிர்வாகத்தை திறம்பட செய்வதற்காக மன்னர்கள் அச்சுக்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
கீழடி, அகரம், மணலுார்,கொந்தகை உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடியில் பண்டைய கால ஆமை உருவத்தை குறிக்கும் வகையிலான அச்சு எடுக்கப்பட்டுள்ளது.
நாடுகளை விட்டு வெளியேறும் நபர்களுக்கும், உள்ளே வரும் நபர்களுக்கும் அடையாளம் காணும் வகையில் இந்த அச்சுகளை பயன்படுத்தி குறியிட்டிருக்கலாம், இதனை கண்காணிக்க அதிகாரிகள் நியமித்திருக்கலாம். நிர்வாகத்தை திறம்பட செய்வதற்கும் வெளியூர் நபர்களை அடையாளம் காணவும் அச்சுகளை பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டு என கூறப்படுகிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!