Advertisement

வாசுதேவநல்லூரில் எலுமிச்சை மையம் அமைக்க இடம் தேர்வு

Share
தென்காசி : வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் எலுமிச்சை மையம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகளில்;; எலுமிச்சை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. எலுமிச்சைக்கு உரிய விலை கிடைக்கவும், எலுமிச்சை விவசாயிகளின் நலனை முன்னிட்டும் தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து அரசுதரப்பில் தோட்டக்கலைத்துறை சார்பில் எலுமிச்சை மையம் அமைக்க இடம் தேர்வு நடைபெற்றது.

தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் வாசுதேவநல்லூர் ஆத்துவழி குளம் அருகில் எலுமிச்சை மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதை பார்வையிட்டார். கலெக்டருடன் வாசுதேவநல்லூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பவித்ரா, தோட்டக்கலை உதவி அலுவலர்கள் வைகுண்டசாமி, சண்முகவேல்ராஜன், சிவகிரி வட்டாட்சியர்ஆனந்த், குடிமைப்பொருள் வழங்கல் வட்டாட்சியர் ராமலிங்கம், துணை வட்டாட்சியர் சரவணன், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், சர்வேயர் காளி, கிராமநிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் சென்றிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement