Advertisement

ரூ. 57 லட்சம் போதைப்பொருள் தென்காசி, துாத்துக்குடியில் சிக்கியது

Share
தென்காசி :தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் நேற்று 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அத்தியூத்து அருகே ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு சொந்தமான தோட்டத்தில் குற்ற தடுப்பு நுண்ணறிவு போலீசார் சோதனையிட்டனர். அங்கு 3000 கிலோ பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்தன. மேலும் கடையநல்லுார் அருகே மாவடிக்கால் பகுதியில் மறைத்துவைத்திருந்த 1000 கிலோ போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 40 லட்சம் ரூபாய்.தென்காசியி பிரகாஷ்படேல், முத்துராஜ் 41, ராஜவேல் 38, மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.துாத்துக்குடிதுாத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் மேற்பார்வையில் ஸ்டேட்பாங்க் காலனியில் நடத்தப்பட்ட வாகனசோதனையில் பிருத்விராஜ் 22, மகாராஜன் 36, சோலையப்பன் 30, கைது செய்யப்பட்டனர். அவர்கள் குறிஞ்சிநகரில் பதுக்கியிருந்த 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1000 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பைக், 3 கார்கள், லாரி பறிமுதல் செய்யப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement