Advertisement

ஜிம் திறந்தாச்சு... இளைஞர்கள் குஷி!

Share
கோவை:கடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு, கோவையில் உள்ள ஜிம்கள் நேற்று திறக்கப்பட்டன. உடற்பயிற்சியாளர்கள் விதிமுறைகளை பின்பற்றி, ஆர்வத்துடன் உடற்பயிற்சி மேற்கொண்டனர்.
கோயம்புத்துார் ஜிம் அண்ட் பிட்னஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் செயலாளர் பிரேம் கூறுகையில், ''ஜிம் வரும் அனைத்து வாடிக்கையாளர், பயிற்சியாளர்கள் முழு முகக்கவசம், கையுறைகள் அணிந்தால் மட்டுமே பயிற்சி பெற அனுமதிக்கப்படுகின்றனர்.வருவோரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். காலணிகளுக்கு உள்ளே அனுமதி கிடையாது.
ஜிம்மின் அறைக்கு ஏற்ப, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். வாடிக்கையாளர்கள் குடிநீர், இரண்டு துண்டு, இரண்டு டி- சார்ட் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு பேட்ச் முடிந்தவுடன் அனைத்து ஜிம் உபகரணங்களும், சானிடைசரால் சுத்தம் செய்யப்படும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு -

    அந்த காலத்தில் இயந்திரங்கள் குறைவு எல்லாம் உடல் உழைப்பால் வேலை நடந்தது, பெண்களுக்கு -மாவு ஆட்டுதல், அரிசி குத்துதல், ஆண்களுக்கு - விவசாயம், எங்டு சென்றாலும் நடந்து சென்றது அல்லது மிதிவண்டி , வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு, இப்பொழுது எல்லாம் இயந்திர வாழ்க்கை.

  • rajan -

    ஜிம் இல்லாத காலத்தில் மக்கள் ஆரோக்கியமாக இல்லையா. ஜிம்முக்கு போவது என்பது ஒரு கௌரவர அடையாளம் ஆகிவிட்டது. அதுவும் கலர்கலராக டி ஷர்ட் போட்டுகொண்டு முழங்காலுக்குமேல் தொடைகள் தெரிய அரை ட்ரவுசர் போட்டுக்கொண்டு ஜிம்முக்கு போவது ஜம்பத்துக்காக. அப்போதெல்லாம் மிதிவண்டியில் அலுவலகம் சென்று வந்தார்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தது. இப்போது பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்கு போவதற்கு கூட ஸ்கூட்டரை எடுத்துச் செல்கிறார்கள். ஆயிரக்கணக்கில் ஜிம்முக்கு பணத்தை கொட்டுகிறார்கள்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    நாட் ஒன்லி (Not only) இளைஞர்கள் கொரோனாவும்தான் (எல்லாப் புகழும் எங்கள் கௌரவ டாக்டருக்கே)

Advertisement