Advertisement

பருவமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: நீர் சேமிக்க மக்கள் வலியுறுத்தல்

Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே பாலாற்றில், இந்தாண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான மாவடப்பு, திருமூர்த்தி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்கிறது பாலாறு.அர்த்தநாரிபாளையம், கம்பாலபட்டி, மஞ்சநாயக்கனுார், துறையூர், கரியாஞ்செட்டிபாளையம் வழியாக பயணித்து, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் வழியாக ஆழியாறு ஆற்றில் கலக்கிறது. அதன் பின், கேரளாவுக்கு செல்கிறது.இந்த ஆற்றில் மழை காலத்தில், செல்லும் நீரை தடுப்பணை கட்டி, தேங்கினால் சுற்றியுள்ள கிராமங்களில், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்காது. ஆற்றுப்படுகையில், அமைந்துள்ள கிராமங்களில், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.கடந்தாண்டு தொடர் மழை காரணமாக, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது; குடிநீர் தட்டுப்பாடும் நீங்கியது.இந்நிலையில், மழை இல்லாததால், பாலாற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது. கடந்த ஐந்து மாதங்களுக்கு பின், பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகள், மேற்குத்தொடர்ச்சி மலையில், தொடர் மழை பெய்கிறது. இதன் காரணமாக, வனப்பகுதிகளில் சிறு ஓடைகளில் தண்ணீர் ஊற்றெடுத்துள்ளது. காட்டாற்று வெள்ளம், பாலாற்றில் வழிந்தோட துவங்கியுள்ளது.கரியாஞ்செட்டிபாளையம் அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மழை நீர் வீணாகாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'பாலாற்றில், வெள்ளம் நீர் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நீரை சேமித்து வைக்க முடியாத சூழல் உள்ளது. மேலும், பாலாற்றில், ஆங்காங்கே வளர்ந்துள்ள புதர்களை அகற்றவும்; தண்ணீர் வீணாகாமல் தடுக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும்.மணல் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தி, பாலாற்றை மீட்டெடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாறு பாதுகாக்கப்பட்டால், பல கிராமங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும்,' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement