Advertisement

மழையால் பயிர் சேதம் காப்பீடு செய்ய அழைப்பு

Share
ஆனைமலை;கோவை மாவட்ட விவசாயிகள், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை பயிர்களுக்கு காலக்கெடுவுக்குள் பயிர் காப்பீடு செய்ய, அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.நடப்பு காரிப் பருவத்தில், கோவை மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்து உள்ள பல்வேறு பயிர்களுக்கு, காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.அதீத மழை பெய்து வருவதால், விவசாயிகள் காப்பீடு செய்தால், கன மழை, அதிவேக காற்று, மண் சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடரால் பயிர் பாதித்தால், இழப்பீடு வழங்கப்படும்.சோளத்துக்கு ஏக்கருக்கு, 209 ரூபாய் பிரீமியம் செலுத்தி, 10,468 ரூபாய் இழப்பீடு பெறலாம். மக்காச்சோளத்துக்கு, 588 ரூபாய் செலுத்தி, 29,388 பெறலாம். இரண்டுக்கும் செப்., 15ம் தேதி காலக்கெடுவாகும். துவரைக்கு, 331 செலுத்தி, 16,544; நிலக்கடலைக்கு, 578 செலுத்தி, 28,888 பெறலாம். துவரை, நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய வரும், 16ம் தேதி காலக்கெடுவாகும். வாழைக்கு, 4,418 செலுத்தி, 88,364 மற்றும் மஞ்சள் பயிருக்கு, 3,973 செலுத்தி, 79,468 ரூபாய் இழப்பீடாக பெறலாம். வாழை, மஞ்சளுக்கு காப்பீடு செய்ய வரும், 31ம் தேதி கடைசியாகும். மழை காலத்தில் பயிர் சேதத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்காக, விவசாயிகள் காப்பீடு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement