Advertisement

இரு கல்வி மாவட்ட பள்ளிகளில் 10,512 மாணவர்கள் தேர்ச்சி

Share
பொள்ளாச்சி, உடுமலையில், 10,512 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் இம்மாணவர்களுக்கு, 2019-20க்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் வருகைப்பதிவுகளின் அடிப்படையில், பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. பொள்ளாச்சி, உடுமலை கல்வி மாவட்டத்தில், காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் சரிபார்க்கப்பட்டு, மதிப்பெண்கள் 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டன.மேலும், வருகைப்பதிவு இல்லாதவர்கள், தேர்வுகளுக்கு வராமல் இடைநின்ற மாணவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதன் அடிப்படையில், உடுமலை கல்வி மாவட்டத்தில், 59 பள்ளிகளைச் சேர்ந்த, 4,720 மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 87 பள்ளிகளில், 2,776 மாணவர்கள், 3,016 மாணவிகள் என, 5,792 பேர் பத்தாம் வகுப்பு படித்தனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. -- நிருபர் குழு -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement