Advertisement

கர்நாடகாவில் இதுவரை 99,126 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.

Share
பெங்களூரு: கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 99,126 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 54 சதவீதமாக உள்ளது.

இருப்பினும் கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 4,267 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,354 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 114 பேர் பலியானதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,312 அதிகரித்துள்ளது. பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 1243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இன்றைய தேதியில் மாநிலத்தில் 79,908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 681 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கடந்த ஆக.,2ல் கொரோனா கொரோனா உறுதியானதால் பெங்களூரு மனிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது தொற்று முற்றிலும் குணமானதால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்.. இருப்பினும் முன்னாள் மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பி.ஸ்ரீராமலு இன்னும் சிகிச்சையில் இருந்து கொண்டிருக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement