Advertisement

செல்பியை அழிக்கச் சொன்ன முதல்வர்!

Share
கொரோனா பரவல் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., திண்டுக்கல்லில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். விருந்தினர் மாளிகையில், முக்கிய நிர்வாகிகள் மட்டும், தன்னை சந்திக்க அனுமதித்தார். மேலும் அவர்களிடம், 'பூங்கொத்து, சால்வை ஏதும் கொடுக்கக் கூடாது; கை குலுக்கக் கூடாது' போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சிலர், முதல்வரை சந்தித்த, 'குஷி'யில் நெருக்கமாக நின்றபடி, மொபைல் போனில், 'செல்பி' எடுத்தனர்; சில நிமிடங்களுக்கு பின், அவற்றை அழிக்கும்படி, முதல்வர் உத்தரவிட்டார்.

அங்கிருந்த அதிகாரிகள் சிலர், 'பரவாயில்லையே... நம்ம முதல்வர் ரொம்ப உஷாரு தான்... இல்லேன்னா, இந்நேரம் இவர் கதை கந்தலாயிருக்கும்' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement