Advertisement

கேரளாவில் ஒரே நாளில் 784 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

Share
திருவனந்தபுரம்; கேரளாவில் ஒரே நாளில் 784 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,616 ஆக உயர்ந்தது. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் மாநில அளவில் 63.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அங்கு ஒரே நாளில் 1,184 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 35,515 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 7 பேர் கொரோனாவுக்கு பலியானதால் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 115 ஆனது.

நேற்று அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 255 பேருக்கும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 200 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 147 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 146 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 101 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 66 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் 63 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 41 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 40 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 40 பேருக்கும், வயநாடு மாவட்டத்தில் 33 பேருக்கும், ஆலப்புழாவில் 30 பேருக்கும், இடுக்கியில் 18 பேருக்கும், பத்தனம்திட்டாவில் 4 பேருக்கும் புதிதாக தொற்று உறுதியானது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 531 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோழிக்கோடு விமானவிபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்ட கலெக்டர், போலீசார், தீயணைப்புப் படையினர், பொதுமக்கள் உட்பட 600 பேர் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா

    தமிழர்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை.

Advertisement