Advertisement

பெண் கர்ப்பம்: கயவனுக்கு காப்பு!

Share
மதுரவாயல்மதுரவாயலில், பெண்ணை காதலித்து, கர்ப்பமாக்கி, ஏமாற்ற முயன்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, மதுரவாயலை சேர்ந்த திருமணமாகாத, 24 வயது பெண், வயிற்று வலி காரணமாக, நேற்று முன்தினம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் அவருக்கு, ஆண் குழந்தை பிறந்தது. மதுரவாயல் போலீசார் விசாரித்தனர்.இதற்கு, புழலை சேர்ந்த லோகேஷ், 24, என்பவர் தான் காரணம் என, தெரிய வந்தது. இதையடுத்து, லோகேஷை, போலீசார் கைது செய்து விசாரித்தனர்.இதில், லோகேஷ், ஏற்கனவே திருமணமானவர் என, தெரிய வந்தது. கடந்தாண்டு, மதுரவாயல் வழியாக சென்றபோது, அவரது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் முன், வாகனத்தை நிறுத்தி, தண்ணீர் கேட்டுள்ளார்.அப்பெண் அழகாக இருந்ததால், அடிக்கடி அப்பெண்ணின் வீட்டருகே வட்டமிட்டு, திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக, ஆசைவார்த்தை கூறி பழகி உள்ளார்.பின், வெளியே அழைத்துச் சென்று, உல்லாசமாக இருந்துவிட்டு, அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்தார். பாதிக்கப்பட்ட பெண், தான் கர்ப்பமாக இருப்பது குறித்து, லோகேஷிடம் தெரிவித்தபோது, கர்ப்பத்தை கலைத்து விடுமாறு கூறியுள்ளார்.ஆனால், அந்த பெண், இதை வீட்டில் தெரிவிக்காமல், வயிற்றில் நீர்க்கட்டி இருப்பதாக கூறி, சிகிச்சை பெற்று வந்தார்.தற்போது, குழந்தை பிறந்த பின்னர் தான், தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மதுரவாயல் போலீசார், லோகேஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement