Advertisement

ரவுடியை கொன்ற நால்வர் சுற்றிவளைப்பு

Share
கொடுங்கையூர்முன்விரோதம் காரணமாக, வாலிபரை வெட்டிக் கொலை செய்த நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, வியாசர்பாடி, மல்லிப்பூ காலனியை சேர்ந்தவர் தாமோதரன், 29. இவர் மீது, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட, பல வழக்குகள் உள்ளன. இவருக்கு திருமணமாகி, நந்தினி என்ற மனைவியும், ஆறு குழந்தைகளும் உள்ளனர்.கடந்த, 6ம் தேதி, கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரில் நடந்து சென்றபோது, மர்ம கும்பல், அவரை வழிமறித்து, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், வெட்டி சாய்த்தனர். இதில், தாமோதரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து, புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் ராஜேஷ்கண்ணா தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார், கொலையாளிகளை தேடி வந்தனர்.மூன்று நாட்களாக, போலீசுக்கு, 'தண்ணி' காட்டிய கொலையாளிகளை, நேற்று முன்தினம் இரவு, கொடுங்கையூர், குப்பைமேடு அருகே, எம்.கே.பி.நகர் ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார், சுற்றிவளைத்து பிடித்தனர்.விசாரணையில், தாமோதரனுக்கும், வியாசர்பாடியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கஞ்சா விற்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.பின், வியாசர்பாடியில், யார் கஞ்சா விற்பது என்ற போட்டி நிலவியதால், ஒருவரையொருவர் கொலை செய்ய திட்டம் தீட்டினர். இந்த முன்விரோதம் காரணமாக தான், அருண்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து, தாமோதரனை வெட்டிக் கொலை செய்துள்ளார் என, தெரியவந்தது.இதில், தொடர்புடைய, வியாசர்பாடியை சேர்ந்த, அருண்குமார், 26, விஜயகுமார், 20, விஜய், 19, குகன் 18, ஆகிய நால்வரை போலீசார், சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement