Advertisement

சென்னையில் மிக மிக ஆறுதல் குணமடைந்தோர் 1 லட்சம் பேர்

Share
திருவொற்றியூர்,
சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், குணமடைந்தோர் எண்ணிக்கை, 1 லட்சத்தை நெருங்குவது ஆறுதலளிக்கிறது.சென்னையில், கொரோனா தொற்றால், நேற்றுடன், 1 லட்சத்து, 9,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 95 ஆயிரத்து, 161 பேர், தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தவிர, 11 ஆயிரத்து, 654 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொற்று பாதிப்பில், கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, 12 ஆயிரத்து, 620 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 10 ஆயிரத்து, 967 பேர், தொற்று பாதிப்பில் இருந்து மீண்டனர்; 1,417 பேர் மட்டுமே, சிகிச்சையில் உள்ளனர்.அண்ணாநகரில், பாதிக்கப்பட்ட, 12 ஆயிரத்து, 419 பேரில், 1,273 பேர் மட்டுமே, சிகிச்சையில் உள்ளனர். அதேபோல், ராயபுரத்தில், 11 ஆயிரத்து, 871 பேரில், 802 பேர் மட்டுமே, சிகிச்சையில் உள்ளனர்.மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்த, தேனாம்பேட்டையில், 860 பேரும்; தண்டையார்பேட்டையில், 614 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.சிறிய மண்டலமான மணலியில், தொற்றால் பாதிக்கப்பட்ட, 1,803 பேரில், 1,691 பேர் குணமடைந்த நிலையில், 85 பேர் மட்டுமே, சிகிச்சையில் உள்ளனர்.இப்படியாக, புதிய தொற்றின் வீரியம் குறைந்து, குணமடைந்தோர் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்து வருவதால், சென்னையில், ஓரிரு நாட்களில், தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை, 1 லட்சத்தை, எட்டக்கூடும். இது ஆறுதலளிக்கும் விஷயமாக உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement