Advertisement

தடுப்பணையுடன் கூடிய பாலம் ரூ.4.5 கோடியில் பணிகள் தீவிரம்

Share
ஸ்ரீபெரும்புதுார்தாம்பரம் அருகே, அடையாறு ஆற்றின் கிளைக் கால்வாயில், ௪.௫ கோடி ரூபாய் செலவில், தடுப்பணையுடன் கூடிய பாலம் கட்டும் பணி நடக்கிறது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சோமங்கலம் அருகே, அடையாறு கிளை கால்வாய் துவங்குகிறது. மாற்று வழிமழைக் காலத்தில், மலைப்பட்டு, சோமங்கலம், அமரம்பேடு உள்ளிட்ட, 20 ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், இந்த கால்வாய் வழியே அடையாறில் கலந்து, கடலை சென்றடையும்.வீணாகும் உபரி நீரை சேமிக்கும் வகையில், நடுவீரப்பட்டு - -மணிமங்கலம் சாலையின் குறுக்கே கடந்து செல்லும் அடையாறு கிளை கால்வாயில், 4.50 கோடி ரூபாய் மதிப்பில் வாகனங்கள் செல்ல, பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டும் பணிகள், மார்ச்சில் துவங்கப்பட்டன.தடுப்பணை கட்டப்படும் இடத்தில், ஏற்கனவே இருந்த தரைபாலத்தை அகற்றி, அதன் அருகே விவசாய நிலத்தில், தாற்காலிக மாற்று வழி அமைக்கப்பட்டது.மண் சாலையாக இருந்த மாற்று வழியில், கனமழை காரணமாக, தண்ணீர் தேங்கி, இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு, சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.பருவமழைஇதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'படப்பை, குன்றத்துாரை இணைக்கும் சாலையாக மணிமங்கலம் - -நடுவீரப்பட்டு சாலை உள்ளது. தடுப்பணை பணியால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. 'இதனால், 10 கி.மீ., சுற்றி, மாற்று சாலையில் செல்ல வேண்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் பணிகளை முடிக்க வேண்டும்' என்றனர்.பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '70 சதவீதம் கட்டுமான பணிகள் முடிந்து விட்டது. எஞ்சியுள்ள பணிகள் ஒன்றரை மாதத்தில் முடிக்கப்படும்' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement