Advertisement

பிச்சை எடுத்த பணத்தில் ரூ.80 ஆயிரம் கொரோனா நிதி

Share
மதுரை: பிச்சை எடுத்த பணத்தில், 8வது முறையாக ரூ.10,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய முதியவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுவரை அவர் 80 ஆயிரம் ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன், 65. இவர், திருமணம் முடிந்த சில மாதங்களில், குடும்பத்தை பிரிந்து, மும்பை சென்றார். அங்கு வேலை கிடைக்காததால், பிச்சை எடுக்க துவங்கினார். ஊருக்கு திரும்பியவரை குடும்பத்தினர் சேர்க்கவில்லை. பிச்சை எடுத்து வந்தவர், செலவு போக மீதி பணத்தை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மாநிலங்களிலுள்ள பள்ளிகளுக்கு, மேஜை, நாற்காலிகள் வாங்க வழங்கினார். மும்பையில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கியுள்ளார்.
இவர், மே முதல் பிச்சை எடுத்து சேமித்த பணம் தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம் 7 முறை, மதுரை கலெக்டரிடம், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று எட்டாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் வினய்யிடம் வழங்கினார். அவரை பலரும் பாராட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • ஆப்பு -

    நல்ல வருமானமுள்ள தொழிலா இருக்கே... ஆதார், பேன் கார்ட், பேங்க் அக்கவுண்ட் எல்லாம் இருக்கா? ரேஷன் கார்டில் பொருள் வாங்குறாரா? அமலாக்கத்துறை கவனிக்குமா?

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    தினமும் பிச்சை எடுக்கும் இவரிடம் இருக்கும் மனித நேயம் பல ஆயிரம், லட்சம் கோடிகளில் கொள்ளையடித்து வைத்துள்ள அரசியல்வாதிகளிடமும், அரசு அதிகாரிகளிடமும் இல்லாமல் போனது வேதனையானது.

  • Siva Kumar - chennai,இந்தியா

    பிச்சை எடுத்த பணத்தில் நன்கொடை. ஆனால் திமுகவினர் கொள்ளை அடித்த பணத்தில் எவ்வளவு நன்கொடை வழங்கியுள்ளனர்?

  • Ramesh Rangarajan - DC,யூ.எஸ்.ஏ

    //இவர், திருமணம் முடிந்த சில மாதங்களில், குடும்பத்தை பிரிந்து, மும்பை சென்றார்// ஒரு பெண்ணின் வாழ்க்கை வீனானபின் இப்படி தர்மம் செய்வதைவிட சம்பாதித்து குடும்பத்தை காப்பாத்தி இருக்கலாம்.இல்லறமே நல்ல அறமாக இருந்திருக்குமே.

  • G.Loganathan - Coimbatore,இந்தியா

    அய்யா, பிறவிப் பெருங்கடலை தாண்டிவிட்டீர்கள். நலமுடன் வாழ்க.

Advertisement