Advertisement

உறுதி! புதுச்சேரியில் உயரும் நோய் பாதிப்பு ... ஒரே நாளில் 245 பேருக்கு தொற்று

Share
புதுச்சேரி : ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலம் முழுவதும் 912 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 245 புதுச்சேரியில் 192 பேர்;

காரைக்காலில் 6 பேர்; ஏனாமில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.இதையடுத்து, மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,624 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மாநிலத்தின் நான்கு பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் 2,180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று முன்தினம் 66 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து நலம் பெற்று 3,355 பேர் இதுவரை வீடு திரும்பி உள்ளனர். 89 பேர் உயிரிழப்புஉழவர்கரை நண்பர்கள் நகரை சேர்ந்த 66 வயது பெண், கடந்த 5ம் தேதியன்று தொற்று உறுதி செய்யப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை இறந்தார். இவருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளும் இருந்தது.ஏனாம் ஜிக்ரியா நகரை சேர்ந்த 66 வயது ஆண் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் இறந்தார்.அவரது ரத்த மாதிரி எடுத்து சோதித்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இவர்கள் இருவரையும் சேர்த்து கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement